சமீபத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை இப்படித் தொகுக்கலாம்: * எடைக் குறைப்பு சாத்தியமே. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேகமும் அளவும் கேள்விப்படாததாக இருக்கிறதே? * டயட் இருப்பதனால் உடல் சோர்வு ஏற்படுகிறதா? * கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாதவை என்னென்ன? எப்போதாவது ஒரு ஐஸ் க்ரீம், ஒரு கல்யாணச் சாப்பாடு...
உடலுக்கு மரியாதை
குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. 2007 ஜூலை இறுதியில் திடீரென்று ஒருநாள் நாம் இத்தனை குண்டாக இருக்கவே கூடாது என்று தோன்றியது. மிகச் சிறு வயதிலிருந்தே உடல் ஆரோக்கியம் தொடர்பான எவ்வித முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. ஓடுவது, விளையாடுவது, குதிப்பது, குஸ்தி போடுவது, கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை உட்கொள்ளாமல் இருப்பது என்பதிலெல்லாம் கவனம் சென்றதில்லை. வெந்ததைத் தின்று விதிப்படி இயங்கிக்கொண்டிருந்த...


