எண்பத்திரண்டு வயதான ரங்கநாயகி அம்மாளுக்கு திடீரென்று சமீபத்தில் ஒருநாள் நினைவு தவறிப்போனது. நினைவு தவறிக்கொண்டிருந்த வினாடிகளில் தன்னுடைய பர்ஸ் எங்கே இருக்கிறது; உள்ளே எத்தனை பணம் இருக்கிறது என்கிற இரண்டு விவரங்களையும் – தற்செயலாக அருகில் அப்போதிருந்த தன் மூத்த மகளிடம் சொல்லியபடியே மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு எடுத்துப் போனார்கள். ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துபோனது காரணம் என்று...
பச்சைக்கனவு
[மார்ச் மாதத்தையெல்லாம் இனி வெயில் காலம் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது போல் உள்ளது. கடந்த இரு தினங்களாகச் சென்னையில் அவ்வப்போது மழை பொழிந்துகொண்டிருக்கிறது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு. நேற்றுக் காலை கண் விழித்ததும் உண்டான உணர்வை 2004 ஜூலையில் எழுதிய இக்கட்டுரை பிரதிபலிப்பதைத் தற்செயலாக கவனித்தேன். தமிழோவியத்தில்என்னுடைய வலைப்பதிவு இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எழுதியது. நான்கு வருட...
ஓர் எதிர்வினை
ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர் கட்டுரைக்கு ‘உருப்படாதது’ நாராயணனின் எதிர்வினை இது: வன்முறை/வன்மம் என்பது உள்ளார்ந்த விஷயம். கொலைகளும், தற்கொலைகளும் அறிவுக்கு எதிரானவையல்ல. சாமானியர்களுக்கு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், உலகின் முக்கியமான intellectuals, artists எல்லோரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். Emotional Intelligence என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடக் கூடிய...
இருபத்தைந்து தோழர்கள்
இது ஒரு பிரச்னை. என்னளவில் சற்றே முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையும் கூட. என் வீட்டுக்கும் பேட்டையின் பிரதான சாலைக்கும் இடையே தோராயமாக முன்னூறு மீட்டர் இடைவெளி இருக்கும். இந்த முன்னூறு மீட்டர் தொலைவைக் கடப்பதற்குள் குறைந்தது இருபத்தைந்து நாய்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் வேண்டியிருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக ஒரே பகுதியில் வசிப்பவர்கள், ஒரே சாலையைப் பயன்படுத்துபவர்கள் என்கிற வகையில் தோழமை உணர்வு...
ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர்
இதே மார்ச். இதே 11ம் தேதி. சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் பத்திரிகையாளர் நண்பர் முப்பிடாதியின் உதவியுடன் சிறைச்சாலைக்குச் சென்று அவனைச் சந்தித்தபோது காக்கி அரை நிக்கரும் கைவைத்த பனியனும் நெற்றியில் துலங்கிய திருநீறுமாக என்னை அன்புடன் வரவேற்றான். ‘எனக்குத் தெரியும் சார். கண்டிப்பா நீங்க யாராவது வருவிங்கன்னு...
என்னைப்பார், இட்லி இறங்கும்!
அவளை என்னால் ஐந்து நிமிடங்களுக்குமேல் ரசிக்க முடிந்ததில்லை. ஆனால் என் குழந்தை உள்பட எனக்குத் தெரிந்த எல்லா குழந்தைகளுக்கும் அவள் ஒரு ரோல் மாடலாக இருக்கிறாள். அவள் முகம் அச்சிட்ட கைக்குட்டைக்கு மவுசு இருக்கிறது. அவள் படம் போட்ட தம்ளரில் பால் கொடுத்தால் உடனே உள்ளே இறங்குகிறது. துணிக்கடைக்குச் சென்றால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வி, டோரா போட்ட கவுன் இருக்கா? டோரா போட்ட ஃப்ராக் இருக்கா...
70 Kg நாயக்கர் மஹால்
சமீபத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை இப்படித் தொகுக்கலாம்: * எடைக் குறைப்பு சாத்தியமே. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேகமும் அளவும் கேள்விப்படாததாக இருக்கிறதே? * டயட் இருப்பதனால் உடல் சோர்வு ஏற்படுகிறதா? * கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாதவை என்னென்ன? எப்போதாவது ஒரு ஐஸ் க்ரீம், ஒரு கல்யாணச் சாப்பாடு...
தூர்தர்ஷன் நினைவுகள்
திடீரென்று இன்றைக்கு எங்கள் அலுவலகத்தில் – ஆசிரியர் குழுவில் பணியாற்றுவோருக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தோம். தூர்தர்ஷன் நினைவுகள் என்பது கருப்பொருள். எல்லோரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கட்டுரை இது. போட்டியில் நான் கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே இங்கே போட்டுவைக்கிறேன். 1 வழிய வழிய எண்ணெய் தடவித் தலை சீவி, ஒரு இஞ்ச் தடிமனுக்கு...