ArchiveOctober 2012

மறுபதிப்புக்கான மறுஅறிவிப்பு

என்னால் எழுதப்பட்டதான ‘தாலிபன்’ மறுபதிப்புப் பணிகள் முடிவடைந்து இன்று புத்தகம் கைக்குக் கிடைத்தது. பார்க்க மிக லட்சணமாக இருக்கும் இந்நூல் படிக்கவும் அருமையாகவே இருக்குமென்பதைச் சொல்லத் தேவையில்லை. சந்தேகமிருப்பின் முன்னதான பதிப்புகளில் பாய்ந்து பாய்ந்து வாங்கி வாசித்த நல்லவர்களிடம் விசாரித்துக்கொள்ளலாம். இந்தப் புதிய பதிப்பில் புத்தகமானது 256 பக்கங்கள் உள்ளதாக இருக்கிறது. விலையோவெனில் வெறும் 160...

கொட்டிய குப்பையும் கொட்டப்போகும் குப்பையும்

இட்லிவடைக்கு இன்று பிறந்தநாள் என்று அறிந்தேன். வாழ்த்துகள். இணையத்தில் அநாமதேயம் என்பதன் சுவாரசியம் மறைந்து வெகுநாள் ஆகிவிட்டது. யாராயிருந்தால் என்ன, சரக்கு எப்படி என்கிற மனநிலைக்கு வாசகர்கள் பழகிவிட்டார்கள். இட்லிவடை யார் என்ற கேள்வி இன்று பெரும்பாலும் எழுவதில்லை. இட்லிவடைக்குப் பிறகு உதித்த பேயோன், தனது முன்னோர்களின் அனைத்து அருமை பெருமைகளையும் அடித்துக்கொண்டு போய்விட்டார். அவரது பாதிப்பில்...

சிலேட்டுமப் படலம்

இன்று தொடங்கி எனது இத்தளத்தில் ‘ஸ்லேட்’ என்னும் புதிய சந்து திறக்கப்படுகிறது. இதுநாள் வரை ட்விட்டரில் நான் செய்துவந்தவற்றை இனி இங்கே செய்ய உத்தேசம். ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம் என்று நினைத்தால்கூட ட்விட்டரில் தேடித்தொகுப்பது பெரும்பாடாயிருக்கிறது. எழுதுபவை அனாமத்தாக வீணாவது பொறுக்கவில்லை. எனவே வாசகர்கள் / நண்பர்கள் இப்பக்கத்திலேயே என் ட்வீட்களுக்கு பதிலளிக்கலாம். விவாதிக்கலாம். அங்கு செய்யும்...

விரதம் எனும் புரதம்

நண்பர்களுக்கு விஜயதசமி தின நல்வாழ்த்துகள். இந்த வருட நவராத்திரி எனக்குச் சற்று ஸ்பெஷல். பன்னெடுங்காலம் முன்னர் லாசரா ஒருமுறை நவராத்திரி விரதம் குறித்துச் சொன்னார். நவராத்திரியோ, சிவராத்திரியோ ஏதோ ஒரு சாக்கு. விரதம் நல்லது. உண்ணாதிருப்பது அனைத்திலும் நல்லது. ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, இருவேளை குளித்து பூஜை செய்து, செய்யும் தொழில்தவிர வேறெதையும் நினையாதிருந்து பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்...

மலிவு விலையில் மாயவலை

சில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன.
பாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன.

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me