நம் நாட்டில் சாமியார்கள் பலர் உண்டு. பரதேசி முதல் ராஜகுரு வரை… மக்கள் மனங்களை எத்தனை விதமாகப் பிரிக்க முடியுமோ, அத்தனை விதமான சாமியார்களும் உண்டு. ஆனால் வெகுஜனங்களின் மனத்தில் சாமியார் பற்றிய பிம்பம் ஒரே மாதிரி தான். அவர் உணவு விருப்பம் துறந்தவராக இருக்க வேண்டும். பகட்டு துறந்தவராக இருக்க வேண்டும். சைவ பட்சிணியாக இருக்க வேண்டும். முக்கியமாக அவர் காமம் துறந்தவராக இருக்க வேண்டும். அத்தனை...
யதி – வாசகர் பார்வை 1 [உஷாந்தி கௌதமன்]
யதியின் முதலாவது அத்தியாயத்தில் ஒரு புதரைப் பற்றிய வர்ணனை வரும். ஒரு புதரில் வேறு வேறு செடிகள் எங்ஙனம் கிளைகளின் அடர்த்தியில் கூட சரியாகப் பிரிந்து இணைந்து ஒரே மரம் போல உருவாகியிருக்கும் என்று. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். யாருக்குமே ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லை. ஆனாலும் ஒன்றே போல ஒரு நூற்பின்னல் கொண்டு இணைக்கப்பட்டிருப்பார்கள். மொத்தக் கதையும் நான்காவது சகோதரனான விமலின்...