Google Chrome – A quick review

 

கூகுளிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அதன் எளிமை. அலங்காரங்களற்ற தன்மை. தவிரவும் வேகம். இன்றைய புதுவரவான கூகுள் க்ரோம் இணைய உலவியிலும் அதுவே பிரதானமாக இருக்கக் காண்கிறேன்.

நேற்றிரவே நான் தரவிறக்கம் செய்திருக்கவேண்டும்.  ‘குரோம்’பேட்டைவாசிகளுக்கு முன்னுரிமை தரலாம் என்று கூகுளாவது நினைத்திருக்கவேண்டும். பன்னிரண்டு மணிவரை காத்திருந்துவிட்டு போரடித்து, படுத்துவிட்டேன். இன்றைக்கு, இப்போதுதான் சாத்தியமானது.

வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டேன். தளங்கள் விரைவாகத் திறக்கின்றன. அதில் பிரச்னையில்லை. தமிழ்த் தளங்களில் ஞே என்றோ ஓம் என்றோ எழுத்துகள் சிரிக்கவில்லை. உடைவதுமில்லை. ஆனால் ஜிமெயிலில் தமிழில் கடிதங்களை டைப் அடிக்கமுடிவதில்லை. ஏனென்று தெரியவில்லை. யாஹுவுக்கு முன்பே ஜிமெயில்தான் முதல் முதலில் யூனிகோடுடன் நல்ல சிநேகம் பாராட்டியது. ஏனோ கூகுள் க்ரோமில் ஜிமெயிலைத் திறந்து தமிழ்க்கடிதம் எழுதினால் கெட்டவார்த்தையில் திட்டுகிறது. இப்பிரச்னை தீரும்வரை தமிழ் இணையர்கள் க்ரோமைத் தொடர்ந்து கையாள்வார்களா என்பது சந்தேகமே.

[இல்லை. இப்போது அடிக்க முடிகிறது. NHM Writerல் இதற்கென்றே பிரத்தியேகமாகச் சில மாறுதல்களைச் செய்து, தமிழ் டைப் செய்யும் வண்ணம் நாகராஜன் செய்துவிட்டார். ஜிமெயில், வேர்ட் ப்ரஸ், ப்ளாகர் என்று எதிலும் இனி க்ரோமில் இருந்து தமிழ் அடிக்கலாம். இன்னும் சில வேலைகள் இருப்பதாகவும் இன்று மாலை அப்டேட் செய்யப்பட்ட ரைட்டர் அதிகாரபூர்வமாக வெளியாகிவிடும் என்றும் சொன்னார். இதனை கூகுள் க்ரோமுக்குள்ளிருந்துதான் டைப் செய்கிறேன்.]

கெட்டவார்த்தை தளங்களைப் பார்க்க வசதியாக அளிக்கப்பட்டிருக்கும் incognito டேப் ஆப்ஷனை மிகவும் ரசித்தேன். க்ரியேட்டிவிடி! உபயோகித்துப் பார்த்தபோது படக்காட்சிகள் வழக்கத்தைக் காட்டிலும் அதிதுல்லியமாகத் தெரிகின்றன. மனப்பிராந்தியாக இருக்கலாம்.

தொழில்நுட்பம் அறிந்த நண்பர்கள் இதனை அக்குவேறு ஆணிவேறாக அலசி மார்க் போடுவார்கள். வெறும் பயனராக எனக்கு கூகுள் க்ரோம் பிடித்திருக்கிறது. தமிழ் எழுதவராதது ஒரு எரிச்சல். 

வேர்ட் ப்ரஸ்ஸில் இந்த மேட்டரை உள்ளிடும்போது நினைத்த இடத்தில் கர்சரை வைக்க முடியாமல் ஒவ்வொருமுறையும் End பட்டனை அழுத்தி அழுத்திக் கொண்டுவந்து, அங்கிருந்து திரும்பத் திரும்ப டெலீட் பட்டனை அழுத்தி அலைன்மெண்ட் செட் பண்ணவேண்டியிருப்பது இன்னொரு எரிச்சல்.

தொடர்புடைய இட்லிவடை பதிவு

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

14 comments

  • க்ரோம் வந்த உடன் அலுவலகத்தில் இறக்கி பயன்படுத்த முயற்சித்தேன். வலைப்பக்கங்கள் random ஆக வர ஆரம்பித்தன.ஜிமெயில் முதல் கொண்டு கூகுள் அக்கவுண்டில் கூட போக முடியவில்லை. மற்ற ப்ரவுசர்கள் அலுவலகத்தில் அருமையாக வேலை செய்கிறது. கடைசியில் இது ப்ராக்ஸி பிரச்சனையாகத் தான் இருக்குமென முடிவுக்கு வந்து விட்டேன்.இந்த பிரச்சனையால் க்ரோமை அலுவலகத்தில் பயன்படுத்த முடியாது.

    மாலை வீட்டில் முயற்சித்த போது அருமையாக இருந்தது. தமிழில் டைப் பண்ண முடியாதது குறை என்றாலும் பக்கங்கள் லோட் ஆகும் வேகம் பிடித்தது. இருந்தாலும் add-on இல்லாதது பெரிய குறையாகத் தான் இருக்கிறது விரைவில் வருமென நம்பலாம். incognito சூப்பர்.பாலான சைட்களை இனி பயமின்றி போய் பார்க்கலாம் 😉

    இருந்தாலும் க்ரோம் போக வேண்டிய தூரம் உண்டு. அது வரை ஃபய்ர் பாக்ஸ் கை கொடுப்பாள்.

  • க்ரோம் முதல் பார்வை எளிமையாக நன்றாக இருக்கிறது. ஆனால் நெருப்பு நரியில் இருந்து மாற்றக்கூடிய அளவு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முக்கியமாக மேற்சேர்க்கைகள் மற்றும் தமிழில் தட்டச்சுவது வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். இப்பொழுது செய்ததுபோல் க்ரோமில் படித்துவிட்டு நெருப்புநரியில் வந்து பின்னூட்டம் போடும் பொறுமை அதிக நாள் இருக்காது. தமிழ்99 போன்ற தட்டச்சு மென்பொருட்கள் வேலை செய்யுமாம். ஆனால் நம்மைப் போன்று உச்சரிப்பு சார்ந்த தட்டெழுதிகள்தான் வேலை செய்வதில்லையாம். விரைவில் இதற்கு NHM மூலம் ஒரு வழி செய்தால் புண்ணியமாய்ப் போகும்.

  • கொத்தனார், உங்கள் கருத்தை நாகராஜனுக்கு அனுப்புகிறேன். பார்க்கலாம், என்ன சொல்கிறார் என்று.

  • விஜய்

    உங்கள் வினாவை நாகராஜனுக்கு மெசஞ்சரில் தெரிவித்து விவரம் கேட்டேன். அவரது பதில்:

    nagarajan: நாளை காலை NHM Writer with chrome support எதிர்பார்க்கலாம்.

    சந்தோஷம்தானே?

  • சே. தப்பு. மேற்படி பதில் கொத்தனாருக்கு அட்ரஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

  • கொத்தனார், விஜய்:

    நாகராஜன் முடித்துவிட்டார். இன்று [வியாழன்]மாலை கூகுள் க்ரோமில் தமிழில் டைப் செய்ய முடியாத பிரச்னை என்.எச்.எம். ரைட்டரில் [அல்லது NHM ரைட்டரால்] தீர்க்கப்படும். கீழ்க்கண்ட வரிகள் நாகராஜன் சற்றுமுன் அனுப்பியவை:

    //1. typing in indian languages will work as usual in all areas in google chrome including address bar(i am not thinking abt safari now)
    2. it will continue to work perfectly even if google addresses this issue thorough a fix, later..

    anyway, let us update this build in our site in the evening after thorough testing.

    meet u at office.

    K.S.Nagarajan
    Manager – Software Products
    New Horizon Media Private Limited//

  • ஆஹா.. என்னவொரு வேகம்..?

    பா.ரா. பார்த்தீர்களா..? நாகராஜன் பல மாதங்கள் கூகிள் செய்த வேலையின் ஊடே, தனது பணியினை ஒரே நாளில் செய்துவிட்டார்..

    நாகராஜன் வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    நீங்களும்தான் கதை எழுதுகிறேன் என்று சொல்லி ஒரு கதையின் தொடர்ச்சியை எழுத 7 நாட்கள் என்று ஒரு புத்தகத்திற்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறீர்கள்..)))))))))))))

    சோம்பேறித்தனத்திற்கு அளவே இல்லையா..?

  • என்.எச்.எம் ரைட்டர் அபாரமாக க்ரோமை தமிழ்படுத்தியிருக்கிறது. என்னால் சுலபமாக தமிழில் டைப் செய்யமுடிகிறது. இதைக்கூட க்ரோம் ப்ரவுசரில் இருந்துதான் டைப் செய்கிறேன். கீப் ராக்கிங் கைஸ்!

  • க்ரோம்பேட்டை கவிராயருக்கு (கூகுள்) க்ரோம் பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லைதான் 🙂

  • கொத்தனார், http://www.google.com/transliterate/indic/Tamil இதை முயற்சி செய்யவும்.

    நெருப்பு நரிக்குத் தெரிந்த சில விஷயங்கள் க்ரோமுக்குத் தெரியாததால், மால் வேர், திரு மால் வேர் என்று எச்சரிக்கிறது “McAfee” பல Blog களில். நமது மக்கள் வேறு ஏகப்பட்ட அப்லேட்டுகளை (java applets) போட்டு வைத்திருக்கிறார்கள் இலவசமைக் கிடைப்பதால்.

    வலை மனைக்கு வருபவர் காலையில் என்ன சாப்பிட்டார் என்பதைத் தவிர சகலமும் சொல்லும் அப்லெட்கள். நெருப்பு நரிக்கு இந்த விஷயத்தில் அறிவு உண்டு.

  • புதிய NHM எங்கே தரவிறக்கம் செய்ய?

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading