ருசியியல்

 

இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது.

நாவின் சேவகனாக ஊர் உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி விதவிதமான பண்டங்களை ருசி பார்த்த ஒருவன், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் இனி என்று மனப்பூர்வமாக முடிவு செய்து அமர்ந்த வரலாறொன்று இந்தப் பக்கங்களில் மறைந்திருக்கிறது.

தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்த ருசியியல், அது வெளியாகும்போது உருவாக்கிய பேச்சும் வியப்பும் பெரிது. அது நாவின் ருசியை மொழியின் ருசி வென்ற கதை. பட்டாணி சுண்டல் முதல் பாதாம் அல்வா வரை, மசால் வடையில் இருந்து மலாய் பனீர் வரை இந்நூல் பேசும் உணவு ரகங்கள் அநேகம். ஆனால் நுணுக்கமான வாசகர்களுக்கு இது உணவைக் குறித்த நூல் அல்ல என்பது புரியும்.

உணவின் ருசி என்பது வாழ்வின் ருசியை நிகர்த்ததுதான்.  இது வாழ்வை ருசிக்கும் ஒருவனின் ரசனைப் பெருங்கடலின் ஒரு துளி.

நூல் முகப்பு ஓவியம்: மு. கதிரவன்