Blog

கொடுங்கனவு

இரவு ஒரு கொடுங்கனவு. கொங்கு நாடு உதயமாகிவிடுகிறது. வலிமை அப்டேட் வானதி சீனிவாசனுக்கு லெஃப்டினண்ட் கவர்னர் காயத்ரி ரகுராம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போகிற நேரம், ‘நிறுத்துங்கள்!’ என்று கூவிக்கொண்டு ராஜகுரு ஜக்கி வாசுதேவ் உருவிய வாளுடன் அரண்மனைக்குள் நுழைகிறார். கடலுக்குள் மூழ்கிய துவாரகையை மீட்டு வெளியே கொண்டு வந்து, கடல் இல்லாத பாதுகாப்புப் பிராந்தியமான கொங்கு நாட்டில் மறு...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 30)

சில அத்தியாயங்களாக நமது கோவிந்தசாமியைக் காணவில்லை. பாவம் அவன். நகரத்து நிர்வாகத்தினரிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறானோ என்னவோ. சூனியனின் குழுவினர் நிலவனத்தில் கொட்டகையிட்டு தங்கி இருக்கின்றனர். அந்த தங்கத்தவளையை கண்ட அடுத்த நொடியில் நமது தங்கதாரகை சாகரிகதவை காண்கிறான் சூனியன். அவளோடு ஷில்பாவும் கோவிந்தசாமியின் நிழலும் வருவதைக் கண்டதும் அவனுக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. இப்போது அவன்...

சட்னி

வளர்மதிக்குத் தலையெல்லாம் வலித்தது. நெடுநேரமாக அவளைச் சுற்றி எல்லோரும் கூடி நின்று பேசிக்கொண்டே இருந்தார்கள். கணப் பொழுது இடைவெளிகூட இல்லை. அதெப்படி முத்துராமன் அப்படி ஒரு காரியத்தைச் செய்யப் போகலாம்? இவளுக்கு என்ன குறைச்சல்? கண்ணுக்கு லட்சணமான பெண். தவிர அவன் நினைப்பதற்கு முன்னால் எதையும் செய்து தருபவள். திருமணமாகி இந்த ஊருக்கு வந்த நாளாக ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் பார்த்து ஆச்சரியப்படும்படியான...

புரியாதது

ஒரு நாயும் காகமும் பேசிக்கொள்ளும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதைவிட வியப்பு, அவை இரண்டும் பேசியது எப்படி எனக்குப் புரிகிறது என்பது.

நாய்தான் முதலில் உரையாடலைத் தொடங்கியது. 'நேத்துலேருந்து சரியா சாப்பிடல. என்னமோ தெரியல. எதுவுமே கிடைக்கல.'

காகம் சிறிது வருத்தப்பட்டது. 'ஏன், யாரும் சோறு வெக்கலியா?'

இன்ஸ்டாக்ராமுக்குப் போய்விடலாமா?

தெளிவாக அலசி ஆராய்ந்துவிட்டேன். இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையைச் சுண்டி இழுத்து சூனியம் வைக்க வேண்டுமானால் இன்ஸ்டாகிராமுக்குத்தான் குடி மாற வேண்டும். பிரச்னை என்னவென்றால் அங்கே எழுத முடியாது. எதைச் சொன்னாலும் பொம்மை போட்டுத்தான் சொல்ல வேண்டும். கேவலமான அஷ்ட கோணல் செல்ஃபிகளையெல்லாம் லட்சம் பேர் லைக் செய்கிறார்கள். நடிகைகளும் பெண் எழுத்தாளர்களும் இதில்தான் சதம் அடித்துவிடுகிறார்கள்...

டாஞ்ஞெட்கோ என்னும் இம்சை

இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஓர் இணையத்தளம் இருக்கிறதல்லவா? கவிக்கோ, கொக்கோ போல அதன் பெயர் டாஞ்ஞெட்கோ. அதில்தான் பல வருடங்களாக மின் கட்டணம் செலுத்தி வருகிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால், ஒவ்வொரு முறை நான் லாகின் செய்யும்போதும் கடவுச் சொல் தவறு என்று சொல்லும். சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிடும். அதுவும் ஒரு சங்கேதக் குறி போலவென நினைத்துக்கொண்டுவிடுவேன். இந்தப் பல்லாண்டு கால வழக்கத்தை...

ஜென் கதை

அவளுக்கு அவனை மிகவும் பிடித்தது. பார்க்க நன்றாக இருந்தான். படித்தவனாக இருந்தான். தரமான உத்தியோகமும் தாராளமான வருமானமும் இருந்தது. தவிர வீட்டுத் தொல்லைகள், தொந்தரவுகள் இருக்காது என்று தோன்றியது. அவனது வீட்டாரும் தன்மையாகப் பழகினார்கள். பெண் பார்க்க வந்துவிட்டு அவளைப் பிடித்திருக்கிறது என்று அனைவரும் சொன்னார்கள். தனியே அவனோடு பேசியபோது தவறாக எதுவும் தோன்றவில்லை. அழகாகப் புன்னகை செய்தான். எல்லாம்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 29)

தோழிகள் இருவரும் சேர்ந்து கோவிந்தசாமியின் நிழலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். பாவம் காதல் அதன் கண்ணை மறைத்துவிட்டது. அவர்களது விருப்பத்திற்கெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் சூனியன் தன் குழுவோடு நீலவனத்தில் இருக்க, இன்னொரு பக்கம் இவர்கள் இருவரும் கோவிந்தசாமியின் நிழலை அழைத்துக்கொண்டு நீலவனத்திற்கு பயணம் செய்கின்றனர். நீலவனத்தில் எவர் வேண்டுமானாலும் தனக்கான சாம்ராஜ்யத்தை...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!