ஐந்து லட்சம் ரூபாய்க்காகத் தற்கொலை செய்துகொள்வது சிறிது அபத்தம் என்று சம்பத்துக்குத் தோன்றியது. ஓராண்டு முழுவதும் முடங்கிப் போனதில் தொழில் இறந்துவிட்டது. உடைமையாக இருந்த அனைத்தையும் விற்று, இருந்த கடன்களை அடைத்துவிட்டான். ஒரே ஒரு ஐந்து லட்ச ரூபாய்க் கடன் எப்படியோ மீதமாகிவிட்டது. கடன் கொடுத்தவன் கேட்க முடியாத சொற்கள் அனைத்தையும் பேசி ஓய்ந்து, இறுதியாக இன்று காலை நேரில் வருவதாகச் சொல்லியிருந்தான்...
புன்னகை
ஒவ்வொரு நாளும் உறங்கப் போகும்போது அவனை நினைத்துக்கொள்ளக்கூடாது என்றுதான் நினைப்பாள். ஆனால் அந்த நினைவின் தொடர்ச்சியாக அவன் முகம் மனத்தில் தோன்றிவிடும். பிறகு அவனது பேச்சு. செயல்பாடுகள். புன்னகை. எத்தனை எரிச்சலுடன் முகம் காட்டினாலும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் எதிரே வந்து நின்று புன்னகை செய்வான். ‘என் விருப்பத்தை நான் சொல்லாமல் எனக்காக வேறு யார் உன்னிடம் சொல்வார்கள்?’ ‘ஆனால்...
ஊசிப் போகாத காதை
உலக நாடுகள் விரும்பினால் கோ-வின் தளத்தின் தொழில்நுட்பத்தை அளிக்கத் தயாராக இருப்பதாக நமது பிரதமர் அறிவித்திருக்கிறார். நவீன காலத்தில் தானத்தில் சிறந்தது தொழில்நுட்ப தானம்தான். சந்தேகமேயில்லை. என் கவலையெல்லாம் கடந்த இரு வாரங்களாக அந்தத் தளத்துடன் துவந்த யுத்தம் புரியும்போது நான் அளித்த சாபங்களை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அளித்தால் பாரதப் புண்ணிய பூமி தாங்காதே என்பதுதான். நான் முதல் முறை...
உருகாத வெண்ணெய்
பன்னிரண்டு வயதில் விசாலாட்சி மாமி எனக்கு அறிமுகமானபோது அவளுக்கு முப்பது வயதுதான். அக்கா என்று சொல்லியிருக்கலாம். ஆனால் சொன்னதில்லை. மாமி, தனது ஐம்பது வயதுக் கணவரின் இரண்டாம் தாரமாக நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். என் அம்மாவிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும்போதே தான் இரண்டாம் தாரமாக மணமுடித்து வந்தவள் என்பதை வெளிப்படையாகச் சொன்னாள். மாமியின் கணவர் மின்சார...
தனிமையில் நூற்றைம்பது ஆண்டுகள்
இளம் வயதில் அவள் ஒருவனைக் காதலித்தாள். அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு போனான். பிறகு அவளுக்கு வீட்டார் வரன் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். ஓராண்டில் அவன் விபத்தில் காலமானான். அதன் பிறகு அவள் வேலை தேடிக்கொண்டு வெளியூருக்குச் சென்றாள். என்ன ஆனாலும் இனி சொந்த ஊருக்கு வரக்கூடாது என்று நினைத்தாள். வைராக்கியமாக அப்படியே இருந்துவிட்டு, பெற்றோர் இறந்த போது மட்டும் வந்துவிட்டுச்...
அளந்து அளித்த சொல்
ந. பிச்சமூர்த்தியைக் குறித்து லா.ச. ராமாமிருதத்தின் எழுத்தில் எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவரது சிந்தாநதி தொகுப்பில் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி இரண்டு கட்டுரைகள் இருக்கும். இரண்டிலும் பிச்சமூர்த்தி வருவார். அவர் மீது லாசராவுக்கு இருந்த மரியாதை வெளிப்படும். அந்நாளில் பிற அனைத்து எழுத்தாளர்களும் பிச்சமூர்த்தியை எவ்வளவு மகத்தான ஆளுமையாகக் கருதினார்கள் என்பது புலப்படும். இப்போது அதனை...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 28)
நீலநகரத்து சூனியன் இப்போது நீலவனத்துக்கு வந்திருக்கிறான். அவன் அந்த நீலவனத்தைப் பற்றி விரிவாக இந்த அத்தியாயத்தில் சொல்கிறான். அந்த வனத்தின் சிறப்புகளில் ஒன்றாக அங்கே இருக்கும் நூலகத்தை குறிப்பிடுகிறான். அந்த நூலகத்தில் இருக்கும் நூலகர் அவனிடம் பிடிஎஃப் கேட்டது பாராவின் டச். சைவ உணவு உண்ணும் பழங்காலத்து யாளிகளை அவன் அங்கே காண்பது சிறப்பிலும் சிறப்பு. அது மட்டுமில்லாமல் அங்கே இருக்கும் வெவ்வேறு...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 27)
முதலில் செம்மொழிப்பிரியா, பிறகு நரகேசரி, அதன்பிறகு அதுல்யா, இப்போது கோப்பெருஞ்சோழன் மற்றும் தமிழழகி. இப்படி வரிசையாக ஃபேக் ஐடிகளை உருவாக்கி சாகரிகாவுக்கும் கோவிந்தசாமிக்கும் எதிராக சதி செய்து கொண்டு இருக்கும் சூனியன், அவர்கள் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் செம்மொழிப்பிரியாவும் நரகேசரியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள...