மண் சட்டியில் இருந்த நெருப்புத் துண்டுகளை எடுத்து அப்பாவின் நெஞ்சில் வைக்கச் சொன்னார்கள். மின் மயானமானாலும் சடங்குகளை விட்டுவிடுவதற்கில்லை. அவருக்கு அது சுடப் போவதில்லை என்று தெரியும். இருந்தாலும் கஷ்டமாக இருந்தது. வாழ்நாளில் எவ்வளவு முறை அவருக்கு அப்படிப்பட்ட சூட்டைத் தந்திருப்பேன் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றியது. இருக்கும். எப்படியும் ஏழெட்டு முறை. அப்பா கோபித்துக்கொண்டதில்லை...
கால வழு
படுத்து ஒரு ஜாமம் கழிந்தும் வியாசருக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு பார்த்தார். மேல் துண்டை இழுத்து முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தார். பத்து நிமிடம் தியானம் செய்தால் ஒருவேளை தூக்கம் வருமோ என்று அதையும் முயற்சி செய்தார். மிகவும் புத்துணர்ச்சியாகிவிட்டாற்போலத் தோன்றியது. அவருக்கு பயமாக இருந்தது. இப்படியே இருப்பது தொடர்ந்தால் வாழ்நாளில் உறக்கம் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும். எதையாவது...
பேசும் புறா
ஆம், நம்புங்கள். அந்தப் புறா பேசியது. இதை என் மனைவியிடம் சொன்னபோது பைத்தியம் என்று சொல்லிவிட்டுப் போனாள். குடியிருப்பு வளாகத்தில் உள்ள எனக்குத் தெரிந்த சிலரிடம் சொன்னபோது அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் என் மனைவி சொன்னதைத்தான் அவர்கள் நினைத்திருப்பார்கள். நான் என்ன செய்ய. அது பேசியதை நான் கேட்டேன். பிரமையல்ல. கனவல்ல. அது நன்றாக, தெளிவான குரலில்தான் பேசியது. ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். மற்ற...
அழியாத சில
சிக்கல் எதுவுமின்றி வழக்கு நல்லபடியாக முடிந்தது. பரஸ்பரப் புரிதலின் பேரில் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். ஒன்றரை வருடங்களுக்கு மேலாகப் பிரிந்தே இருந்ததால் இருவராலுமே பெரிதாக உணர்ச்சி வயப்பட முடியவில்லை. அதே சமயம் மகிழ்ச்சியோ நிம்மதியோ நிறைந்துவிட்டதாகவும் தோன்றவில்லை. அவன் மதியம் அலுவலகத்துக்குச் சென்று விடலாம் என்று நினைத்தான். அவள் தனது தோழியின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தாள்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 27)
சூனியனை இரண்டு அத்தியாயங்களாகக் காணாமல், இந்த அத்தியாயத்தில் தான் மீண்டும் பார்க்கிறோம். தனக்கு, கோவிந்தசாமி மீதும் சாகரிகாவின் மீதும் எந்தப் பகையும் இல்லையென்றும், அதுல்யா, நரகேசரி, செம்மொழிப்ரியா மூவரும் அவன் லட்சியத்தை நோக்கிய பயண கருவிகள் எனவும் நம்மிடம் கூறுகிறான். ஆனால் செம்மொழிப்ரியா, மூன்றாவதாக எதற்கு அதுல்யா என நம் சூரியனோடு முறையிடும்போது தான், சூனியன் அவனது பாத்திரங்களைக்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 26)
அணில்களால் மின் தடை, இதைச் சாத்தியமாக்க ஒரே வழி, அணில்கள் நீல நகரத்தில் இருப்பதை போலப் பறந்தால் மட்டுமே முடியும். என்ன ஒரு புனைவு! அதுல்யா, கோவிந்தசாமியை தன் கணவன் என்று வெண்பலகையில் எழுதியதற்காக இப்படியா தெருவில் இறங்கி கத்திக்கொண்டே ஓடுவது?, இந்தக் கோவிந்தசாமியை நினைத்தால் ஒரு பக்கம் கேலியாக இருந்தாலும், ஒரு பக்கம் பரிதாபமாக இருக்கிறது. நியாயம் கோரி நகர நிர்வாகம் நோக்கிச் செல்கிறான்...
எழுதும் மனநிலை – சில குறிப்புகள்
தினமும் எழுதுவது நல்லதல்ல. எழுத்து சடங்கல்ல. நிறைய எழுதுவது நல்லதல்ல. நீர்த்துவிடும். ஆரம்பித்தால் முடித்தே தீரவேண்டும் என்பது அவசியமல்ல. சுயமாக ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதினால் நன்றாக வராது. ஆர்வம் எந்தத் திசையில் போகிறதோ, அதனைப் பின் தொடர்வதே நல்லது. நல்ல எழுத்து கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. இவையும், இவற்றை நிகர்த்த இன்னும் பல அறிவுரைகளும் எழுதுவது தொடர்பாகப் பல...
பேய்க்கதை
அந்த மரத்தில் நிச்சயமாகப் பேய் இருக்கிறது; தவறியும் கிட்டே போய்விடாதே என்று பாட்டி சொல்லியிருந்தாள். கிட்டே போனால் மட்டும் கடிக்குமா என்று கேட்டதற்கு, ‘தின்றுவிடும்’ என்று பதில் சொன்னாள். பாபுவுக்குச் சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு பேயைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. பாட்டி கடைக்குக் கிளம்பிப் போன சமயம் அவன் தயங்கித் தயங்கி அந்தப் புளிய மரத்தை...