எப்படி முயற்சி செய்தாலும் சில கிறுக்குத்தனங்களை என்னால் விட முடிவதேயில்லை. எழுத்தாளர்கள் கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பார்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. மிகவும் நேர்த்தியாக வாழும் பல எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். என்னுடைய கிறுக்குத்தனங்களுக்கான பழியை மரபணுவின் மீது போட்டுவிடலாமா என்றால் அதுவும் முடிவதில்லை. வம்சத்தில் என்னைத் தவிர பிறர் சரியாகத்தான் இருக்கிறார்கள். நான் மட்டும்தான்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 24)
பிரம்மனுக்கு அகலிகையை போல, நமது சூனியனுக்கு அதுல்யா என்னும் பேரழகி. தான், பிரம்மனை விடச் சிறந்த படைப்பாளியென நினைக்கிறான் சூனியன். அதற்கான காரணங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறான். கோகழி ஷேத்திரத்தின் மதில் சுவர்மீது வாழும் காளைகளை, திருமாளிகை தேவர் என்ற சித்தர் ஒரு யுத்தத்திற்காக இறக்கி விட்ட புனைவு அபாரம். ஆயிரம் கிளியோபாட்ராக்களின் அழகை கொண்டு பிறக்கவிருக்கும் நம் அதுல்யாவின் சரித்திரத்தை...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 10)
எதிலோ ஆரம்பித்து எங்கோ நுழைந்து இந்த அத்தியாயம் இங்கு வந்து நிற்கும் என்று நினைக்கவில்லை. எல்லாம் அந்த பாராவுக்கே வெளிச்சம். நீலநகரத்தில் கோவிந்தசாமி ஒருபக்கம், அவனது நிழலும் சூனியனும் ஒருபக்கம் என்று சுற்றி திரிந்து சாகரிகாவை அழைத்து செல்ல நினைக்கிறார்கள்.ஆனால் அவளுக்கு கோவிந்தசாமியின் மீது ஒரு பிடி அளவுக்கு கூட காதல் இல்லை என்பதை நீல நகரத்தின் வெண்பலகையில் படித்து தெரிந்துக்கொண்டு அதை...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 24)
பொதுவாக உலகத்தில் என்ன நடக்கிறது? பிரம்மன் ஒரு உயிரை படைக்கிறான். அந்த உயிர் போகிற போக்கில் இந்த மண்ணில் வாழ்ந்து ஒரு சரித்திரத்தை விட்டுவிட்டுப் போகிறது. அதனை எத்தனை பேர் நினைவில் எவ்வளவு நாட்கள் வைத்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். ஆனால், தான் அந்த பிரம்மனைப் போலல்ல என நினைக்கும் சூனியன் தான் படைக்கப் போகும் படைப்பின் சரித்திரத்தை முதலில் எழுதிவிட்டு அதன் பிறகே அவளை படைக்கிறன். அழகிய அந்த...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 9)
இதென்ன கூத்து? பாரா தன்னை தானே இழுத்து கதையில் விட்டுக்கொள்கிறாரே. போதாத குறைக்கு கோரக்கர் வேறு. சரி இருக்கட்டும். இப்போதைக்கு பாராவை சூனியன் எதிரியாகப் பார்க்கிறான். ஏனெனில் பாரா கடவுளின் கைக்கூலியான கோரக்கர் சித்தரின் அதிதீவிர பக்தர்.என்றால் சூனியன் சாலச்சிறந்த சங்கியான கோவிந்துக்கு ஏன் உதவ நினைக்கிறான்?அவன் சூனியனின் எதிரியான கடவுளின் தீவிர குருட்டு பக்தனாயிற்றே? நீல நகரத்தின் வெண்பலகையை...
நான் மில்லியனர் ஆகப் போகிறேன்.
அன்பின் மூசா முகமது, உங்கள் அஞ்சலுக்கு நன்றி. சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவன டைரக்டரிக்கு என் மின்னஞ்சல் எப்படிச் சென்றது என்று தெரியவில்லை. பாருங்கள், நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கார் என்பது எனக்கே தெரியாதிருக்கிறது. அது நிற்க. இருபத்திரண்டு மில்லியனில் நாற்பத்தைந்து சதமானப் பங்கு என்பது பெரிய தொகை மட்டுமல்ல. உங்கள் பரந்த உள்ளத்தையும் காட்டுகின்றது. இந்தப் பணம் எனக்குக் கிடைத்துவிடும் பட்சத்தில்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 23)
முதலில் குனியன் சொல்கிறான், ஏதோ ஒரு மலை, மலையில் ஒரு மரம், அதிலொரு பழம், அந்தப் பழத்தின் சிறப்பு, அதைக் கொண்டு அவன் செய்யப் போகும் பணிகள், இவ்வளவுதான். ஆனால் இதையே ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் விவரித்துக் கொண்டே சென்றால், வேறென்ன, பிரமிப்புதான் மிஞ்சுகிறது. அவையெல்லாம் நமது கற்பனைக்கு மிகவும் அப்பாற்பட்டவை. பிறகு வருவதெல்லாம் நாம் அறிந்த விஷயங்கள் தான். ஆனால் அவற்றை சொல்வது யார்? அந்த...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 23)
கடந்த சில அத்தியாயங்களாகக் கதைக்களம் நேரியலாகவும், புனைவுகள் அதிகம் இல்லாமலும் நகர்ந்து கொண்டிருந்தது. அதற்கெல்லாம் ஈடு செய்வது போல, இந்த அத்தியாயம் மிகு புனைவைக் கையிலெடுத்து விறுவிறுப்பாய் பயணிக்கிறது. மனிதனுக்கோ, சூனியனுக்கோ ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம் கலந்த மரியாதை வேண்டி இருக்கிறது. மனிதனுக்கு கடவுளைப் போல, சூனியர்களுக்கு ஹிக்லியோனஸ் மலைச் சிகரத்தில் இருக்கும் சகட விருட்சம். அதன் ஓசைக்கு...