ஓர் ஆண்டு, உலகம் முழுவதையும் வீட்டுக்குள் அடங்கியிருக்க வைக்கும் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. 2020 ஜனவரி முதல் தேதி உலக மக்கள் எவ்வளவு நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாகப் புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். அதற்கு முன்பே கொரோனா வைரஸ் சீனத்தில் பிறந்துவிட்டது என்றாலும் தகவல் பெரிதாக வெளியே வரவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து மெதுவாக மாத...
வாடகைப் பை (கதை)
கருப்பையை வாடகைக்கு விட்டதற்குப் பணம் கிடைத்தது. ஓராண்டுக் காலம் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உண்ண முடிந்தது. அவ்வப்போது விரும்பிய எளிய ஆடம்பரங்களையும் அனுபவிக்க முடிந்தது. பெற்றுத் தரப் பணம் கொடுத்துவிட்டு, அடுத்த வருடம் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போன புருஷன் பெண்டாட்டி அமெரிக்கர்கள். அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. zoom callல்...
நூறு சீன்
அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும். இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான்...
ஒளியும் ஒலியும் (கதை)
அவனுக்குக் கண் தெரியாது. அவளுக்குக் காது கேட்காது; பேசவும் முடியாது. பொருத்தம் சரியாக இருக்கிறது என முடிவு செய்து இரு தரப்புப் பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு செத்துப் போனார்கள். ஆரம்பத்தில் வாழ்க்கை சிறிது நன்றாக இருப்பது போலத்தான் இருந்தது. அவள் கருத்தரித்து, குழந்தை பெற்றாள். பிறகு இருவருக்கும் பிடிக்காமல் போனது. தொடர்ந்து அரூபமான உலகில் வாழ முடியவில்லை என்று இருவருமே...
வேடிக்கை பார்த்தவர்கள் (கதை)
சி ப்ளாக் நான்காவது தளத்தில் வசிக்கும் சொக்கநாத முதலியார் லிஃப்ட் ஏற வரும்போது குரங்குகளைப் பார்த்தார். ஒன்று மிகப் பெரிதாக, புஷ்டியாக இருந்தது. இன்னொன்று குட்டிக் குரங்கு. இரண்டும் லிஃப்ட் அருகே அமர்ந்திருந்தன. சொக்கநாத முதலியாரைப் பார்த்ததும் ‘குர்ர்..’ என்றது பெரியது. அவர் பயந்துவிட்டார். அலறிக்கொண்டு பின்னால் வந்து, ‘யாராவது வாங்க. உடனே வாங்க’ என்று சத்தம் போடவும் கதவு...
பேயைப் பெற்றவள் (கதை)
ஒரு ஊரில் ஒரு பெண் பேய் இருந்தது. அது இன்னும் இறக்காத ஒரு பையனைக் காதலித்தது. எப்படியாவது அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, இறந்த தன் தந்தைப் பேயிடம் சொல்லி இன்னும் இறக்காத தாயைப் போய் வரன் பேசச் சொல்லிக் கேட்டது. தந்தைப் பேய் தன் பழைய மனைவியின் கனவில் சென்று விவரத்தைச் சொல்லி, ‘நம் ஒரே மகளின் ஆசையை அன்றே நிறைவேற்றி வைத்திருந்தால் அவள் பேயாகியிருக்கவே மாட்டாள்; இப்போதாவது அவள்...
நடந்தது (கதை)
தவறு நடந்துவிட்டது என்று நினைக்கத் தோன்றவில்லை. விரும்பிச் செய்த ஒன்று எப்படித் தவறாகும்? ஆனால் வீட்டில் எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஆறுமுகம் நல்லவன். ‘கட்ன புடவையோட வா. நான் இருக்கேன் ஒனக்கு’ என்றுதான் நேற்றுக்கூடச் சொன்னான். ஆனால் தன் வீடு அவ்வளவு எளிதாக இதை ஏற்காது என்று நினைத்தாள். அம்மா அழுவாள். அப்பா கையில் கிடைப்பதைத் தூக்கிப் போட்டு உடைப்பார். இழுத்துத் தள்ளி...
அஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)
மே 2017ல் கடுகு சாரிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இருந்த வரிகள்: //அன்புள்ள பா.ரா அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன்...