Tagசிறுகதை

நூறு சீன்

அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும். இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான்...

வாழும் கலை (சிறுகதை)

எப்படியும் வேலை போய்விடும் என்று எதிர்பார்த்தான். கொத்தாக இருபது இருபத்தைந்து பேரைத் தூக்கப் போகிறார்கள் என்று தகவல் பரவ ஆரம்பித்திருந்தது. நிர்வாகம் கூப்பிட்டுச் சொல்வதற்கு முன்னால் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. இன்னோர் இடத்துக்குப் போய் உட்காராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இடைப்பட்ட நாள்கள் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். கையிருப்பு அதிகமில்லை. செலவே செய்ய முடியாது...

நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா?

சில காலம் முன்னர் பத்ரி ஒருமுறை என்னிடம், ‘உங்கள் வலைப்பதிவின் சைட் பாரில்  நானொரு இலக்கியவாதி இல்லை என்று  கட்டம் கட்டிப் பெரிதாகப் போடுங்கள்’ என்று சீரியஸாகச் சொன்னார். செய்வதில் எனக்குப் பெரிய ஆட்சேபணை ஒன்றுமில்லை. அநாவசியமான சில விவாத விதண்டாவாதங்களைத் தவிர்க்கலாம் என்பதால்தான் செய்யவில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும். படைக்க அல்ல. படிக்க. அதுதான் என் எழுத்துக்கு வலு சேர்ப்பது. கொஞ்சகாலம்...

C/O கருவறை

வழியும் சத்தியமும் ஜீவனும் சந்தேகமில்லாமல் நானே தான். வந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போ என்று எம்பெருமான் கூப்பிட்டான். கூப்பிட்ட மரியாதைக்குப் போய்ச் சேர்ந்தபோது பதினெட்டு மணிநேரம் கூண்டுக்குள் காத்திரு என்று திருப்பதி தேவஸ்தானத்தின் எலக்டிரானிக் போர்டு சொன்னது. சுந்தரத் தெலுங்கும் மந்திரத் தமிழும் மற்றும் கொஞ்சம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் கலந்த ஒலிச் சித்திரங்கள் இடைவிடாமல்...

உண்ணி

எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது. கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள். பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை...

சாட்சிக்காரன் குறிப்புகள்

கனவே போலத்தான் இருந்தது. ஒருமுறை கண் இமைத்துத் திறக்கும் நேரத்தில் அவளை நான் கண்டுகொண்டேன். ஞாபகத்தில் பிசகேதும் இல்லை.  ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – பிராக்கெட்டில் சுத்த சைவம் – முதலாளி தையூர் வரதராஜு முதலியாரின் இரண்டாவது பெண் பொற்கொடிதான் அவள். பதினெட்டு வயதில் பார்த்தது. பத்து வருஷத்துக்கு உண்டான தோற்றம் சார்ந்த மாற்றங்கள் இருப்பினும் அடிப்படை வார்ப்பு மாறிவிடுமா என்ன...

எழுத்துக் கல்வி

புத்தகங்கள் வாங்க

வலை எழுத்து

தொகுப்பு

வகை

RSS Feeds

படைப்புகளை மின்னஞ்சலில் பெற


நூலகம்

மின்னஞ்சல்

para@bukpet.com