Categoryஎழுத்து

யுத்தம் சரணம்: சில விமரிசனங்கள், சில விளக்கங்கள்

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியாகும் என்னுடைய ‘யுத்தம் சரணம்’ தொடர் குறித்து இணையத்தில் வெளியாகும் சில விமரிசனங்களைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து சில வாசகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். நண்பர் சுரேஷ் யுத்தம் சரணம் அறிவிப்பு வெளியான பதிவில் இன்று இதனை ஒரு வினாவாக முன்வைத்துள்ளார். வாசகர்களின் வசதிக்காக அவரது கருத்தைக் கீழேயும் அளித்திருக்கிறேன். இது பற்றிய என் கருத்துகள் இதனைத் தொடர்ந்து...

நன்றி, திரு. ஹெமிங்வே!

எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில்...

யாளிமுட்டை

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, ‘படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?’ என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி...

வலி உணரும் நேரம்

எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.

Fitna: ஓர் எதிர்வினை

அன்புள்ள பா.ரா, மேற்படி பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் – // பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. // தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே...

காது, காதல், கடவுள்

எம்.வி. வெங்கட்ராம், தமது கடைசிக் காலத்தில் ‘காதுகள்’ என்று ஒரு நாவல் எழுதினார். ஒருவனுக்கு திடீரென்று காதுக்குள் வினோதமான சத்தங்கள் கேட்கும். சத்தம் இரைச்சலாகும். இரைச்சல் சமயத்தில் இசையாகவும், வேறு சமயத்தில் பயங்கரமான பிசாசுக்குரலாகவும் கூட ஒலிக்கும். வெங்கட்ராம், தம் காதுக்குள் கேட்ட குரலைத்தான் அந்நாவலில் எழுத்துவடிவில் பதிவு செய்து வைத்ததாகச் சொன்னார். காதுகள் நாவல் வெளியானபோது...

புதையல் காக்கும் பாட்டி

எண்பத்திரண்டு வயதான ரங்கநாயகி அம்மாளுக்கு திடீரென்று சமீபத்தில் ஒருநாள் நினைவு தவறிப்போனது. நினைவு தவறிக்கொண்டிருந்த வினாடிகளில் தன்னுடைய பர்ஸ் எங்கே இருக்கிறது; உள்ளே எத்தனை பணம் இருக்கிறது என்கிற இரண்டு விவரங்களையும் – தற்செயலாக அருகில் அப்போதிருந்த தன் மூத்த மகளிடம் சொல்லியபடியே மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு எடுத்துப் போனார்கள். ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துபோனது காரணம் என்று...

பச்சைக்கனவு

[மார்ச் மாதத்தையெல்லாம் இனி வெயில் காலம் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது போல் உள்ளது. கடந்த இரு தினங்களாகச் சென்னையில் அவ்வப்போது மழை பொழிந்துகொண்டிருக்கிறது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு. நேற்றுக் காலை கண் விழித்ததும் உண்டான உணர்வை 2004 ஜூலையில் எழுதிய இக்கட்டுரை பிரதிபலிப்பதைத் தற்செயலாக கவனித்தேன். தமிழோவியத்தில்என்னுடைய வலைப்பதிவு இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எழுதியது. நான்கு வருட...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!