சோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் துக்ளக்குக்கும் எனக்கும் சில ஜென்மாந்திரத் தொடர்புகள் உண்டு. தில்லி சுல்தான் துக்ளக். தன் வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறைக்குமேல் அவர் தலைநகரை மாற்றியதில்லை. ஆனாலும் ஏனோ அந்த ஜீவாத்மாவை நினைவுகூரும் போதெல்லாம் எப்பப்பார் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறவர் என்று நமக்குத் தோன்றிவிடுகிறது. எல்லாம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் சதி...
சூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்?
நான் திரும்பத் திரும்ப வாசிக்க விரும்பும் புத்தகங்களுள் ஒன்று பொன்னியின் செல்வன். சினிமாவில் இருப்பவர்கள், சினிமாவின்மீது ஈர்ப்பு இருப்பவர்கள் இரு தரப்புக்கும் இது ஒரு விசேஷமான கதை. லட்சக்கணக்கான வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக ரசித்துவரும் படைப்பு என்பது உண்மையே. ஆனால் சினிமா பிரியர்களுக்கு இது ஒரு தீராத வியப்பளிக்கும் கதை. காரணம், இதைவிடச் சிக்கலான ஒரு கதையை, இதைவிட நேர்த்தியாகத் திரைக்கதை வடிவில்...