[அமேசான் pen to publish போட்டி தொடர்பாக ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த விவாதங்களுக்கு பதிலாக நவம்பர் 2, 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது] மூன்று நாள்களாகப் பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு வேலை. இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். அனைத்துக்கும் கருத்துச் சொல்ல ஆயாசமாக உள்ளது. பொதுவாகவே எனக்குக் கருத்து சொல்வது ஒவ்வாமை தரும். அவரவர் கருத்து அவரவருக்கு...