நகரம் காலியாக இருக்கிறது. நடமாட்டம் இல்லை. வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன. கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. எத்தகைய நெரிசலுக்கும் அசராமல் எல்லா சாலைகளிலும் ஊர்ந்து செல்லும் மாடுகள் எங்கே போயின என்று தெரியவில்லை. எப்போதும் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு சீறிப் பாயும் எண்பத்தேழாயிரத்து நாநூற்று எண்பது நாய்களும் முடங்கிவிட்டன. பெட்டிக் கடைகள் இல்லை...