'நீங்கள் New Horizon Media Private Limited' என்ற பெயரில்தான் பபாசியில் உறுப்பினராகியிருக்கிறீர்கள். எனவே உங்கள் அரங்க முகப்பில் அந்தப் பெயரைத்தான் பலகையில் வைக்க முடியும். கிழக்கு பதிப்பகம் என்று திருத்த முடியாது.’ முந்தைய வருடங்களில் எல்லாம் அப்படித்தானே இருந்தது என்று பிரசன்னா குழுவினர் வாதாடிப் பார்த்து வெறுத்துப் போய்த் திரும்பியிருக்க, [‘முன்ன இருந்திருக்கலாம் சார். இப்ப...
மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்
இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது. இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே...
சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்
வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன. * ஆஸ்டின் இல்லம் * தீண்டும் இன்பம் * நில்லுங்கள் ராஜாவே * மீண்டும் ஜீனோ * நிறமற்ற வானவில் தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம். அவ்வண்ணமே...
ஒரு தீவிரவாத செயல்திட்டம்
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் ஒரு விசேஷம். வருகிற விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்குடன் என்ன வைத்துக்கொடுக்கலாம் என்று பேச்சு வந்தது. என் அப்பாவை சந்தோஷப்படுத்த முடிவு செய்து, நான் ஓர் அறிவிப்பு செய்தேன். எத்தனை பேர் வந்தாலும் சரி. வெற்றிலை பாக்குடன் என் அப்பா எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை அவர்களுக்கு அன்பளிப்பாகத் தருவது. செலவும் பொறுப்பும் என்னுடையது. அப்பாவுக்கு...
சென்னை புத்தகக் காட்சி 2010- விவரங்கள்
* 33வது சென்னை புத்தகக் காட்சி, எதிர்வரும் டிசம்பர் 30ம் தேதி, புதன் கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானம் – பச்சையப்பன் கல்லூரி எதிரே, சேத்துப்பட்டு, சென்னை 30. * பபாசி அமைப்பின் புதிய தலைவர் சேது சொக்கலிங்கம் [கவிதா பதிப்பகம்] வரவேற்புரை ஆற்ற, வழக்கம்போல் நல்லி குப்புசாமி செட்டியார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார். * தமிழக...
எம்.ஜி.ஆர். கதை
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ, ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். சினிமா காரணமென்றால் வேறு யாராலும் முடியவில்லையே? பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் தொடங்கிவைத்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக்...
வரைபடம்
சென்னை புத்தகக் காட்சி டிசம்பர் 30ம் தேதி சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது. கண்காட்சியில் New Horizon Media நிறுவனத்தின் புத்தகங்கள் கிடைக்கும் அரங்க எண்களை மேலுள்ள வரைபடம் சுட்டுகிறது. கிழக்கு நூல்கள் P1 அரங்கில் கிடைக்கும். நலம் வெளியீடுகள் அரங்கு எண் 455-456ல் கிடைக்கும். கிழக்கு வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள் விருட்சம் அரங்கில் [அரங்கு...
ருசி
சென்ற வருடம் நாரத கான சபாவில் ஞானாம்பிகா கேடரிங் கிடையாது. நிறுவனத்தில் பெரிய அளவில் ஏதோ திருடு போய்விட, டிசம்பர் சீசனில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று நண்பர் ஜே.எஸ். ராகவன் சொன்னார். ஆனாலும் அலுவலகத்துக்குப் பக்கம் என்பதால் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்க்கப் போயிருந்தேன். பிடிக்கவில்லை. வேறு யாரோ. சனியன் பிடித்த சூர்யாஸ் சுவைதான் அதிலும் இருந்தது. இந்த வருடம் ஞானாம்பிகா திரும்ப வந்துவிட்டது...