விக்கிரகத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்றெல்லாம் நம்பி, கைகூப்பித் தொழும் பருவம் கடந்தபின்னும் சில பாலிய வழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. கிருஷ்ண ஜெயந்தி அதிலொன்று. எங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி மிகவும் விசேஷமானது. அன்றைக்கு அம்மா சாப்பிடமாட்டாள். காலை முதல் கிருஷ்ண ஸ்மரணை. கிருஷ்ணரை நினைத்தபடி கைமுறுக்கு, வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை, வாழைப்பழம் போட்ட அப்பம் என்று ஆரம்பித்து ஒரு மெனு கார்ட்...
ஈரோடில் இரண்டு நாள்
அந்தமாதிரி ஒரு தயிரை நான் வேறெங்கும் கண்டதுமில்லை, உண்டதுமில்லை. ஈரோடு வ.ஊ.சி. பூங்காவுக்கு அருகிலுள்ள லீ ஜார்டின் உணவகத்தில் பகலுணவுக்குச் சென்றால் கிட்டும். மண் கலயத்தில் எடுத்து வந்து வெட்டி வெட்டிப் போடுவார்கள். எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் போடுவார்கள். சற்றும் புளிக்காத, மென்மை மேவிய இட்லி போல் கனமான தயிர். இரு வருடங்களுக்குமுன் முதல்முறை புத்தகக்...
ஒரு மாணவனின் புத்தகம்
* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். – யாமாசான் * உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. – அகிரா குரோசாவா. கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்...
அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் [11.12.1918 – 03.08.2008]
1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம். சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப் படைப்புகளல்ல என்று பலபேர்...
குசேலன்
இந்தப் படத்தில் ஒரே ஒரு ஷாட்டை நான் மிகவும் ரசித்தேன். சலூன் வைத்திருக்கும் ஹீரோவான பசுபதி, கட்டிங் – ஷேவிங்குக்கு அதிரடி விலைக்குறைப்பு செய்து ஒரு போர்ட் எழுதி வைப்பார்.
கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும்.
துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும் அதைத்தான் செய்திருக்கிறார்.
* நான் ரசித்த நாகராஜனின் விமரிசனம் இங்கே.
ஒரு வேதாளம் சாத்துக்குடி மரம் ஏறுகிறது
சரியாக ஒரு மண்டல காலம். என்னுடைய டயட் பயிற்சிகளை நிறுத்திவைத்திருந்தேன். தொண்ணூறிலிருந்து எழுபத்திமூன்று கிலோவுக்கு வந்து சேர்ந்ததைக் கொண்டாடலாம் என்று தேவதையோ சாத்தானோ காதோரம் வந்து சொன்னது. அது நடந்தது ஜூன் 13. சில உண்மைக் காரணங்களும் உண்டு. முதலாவது, சோர்வு. இந்தப் பக்கங்களில் முன்னரே எழுதியிருக்கிறேன். டயட் இருப்பது என்பது ஒரு வேலை. பிற வேலைகள் மிகும்போது இந்த வேலை அடிபடும். அலுவலகப் பணிகள்...
கருத்துக்களம் திறக்கப்படுகிறது.
நண்பர்களுக்கு வணக்கம். இந்த வலைத்தளத்தின் வாசகர் கருத்துக் களம் [Comments Section] இன்றுமுதல் திறக்கப்படுகிறது. இத்தளத்தில் நான் எழுதத் தொடங்கிய நாளாக இதில் வாசகர் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான இடம் ஏன் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகவும் ஆதங்கமாகவும் கோரிக்கையாகவும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. நண்பர் வெங்கட் இதனை மிகத் தீவிரமாகக் கண்டித்துத் தம் பதிவு ஒன்றில் குறிப்பிட [என்ன...
ஈரோடு புத்தகக் கண்காட்சி 2008
01.08.2008 நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல், மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. வழக்கம்போல் கிழக்கு, ப்ராடிஜி அரங்குகள் இடம்பெறுகின்றன. 09, 10 இரு தினங்களும் [அடுத்த சனி, ஞாயிறு] நான் ஈரோடு நகரத்தில் இருப்பேன். நெய்வேலியில் நிகழ்ந்தது போலவே ஈரோடிலும் ப்ராடிஜி சார்பில் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசளிப்பு விழா ஒன்பதாம் தேதி காலை பத்து...