அனுபவம்

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 3)

விறுவிறுப்பாக செல்லும் இந்த கபடவேடதாரியின் மூன்றாவது அத்தியாத்தில், சூனியக்காரன் தனது வாழ்வின் இறுதிக்காலத்தின் நிகழ்வான மரணதண்டனைக்கு செல்கிறான்.

இனி வாழ்வில் திரும்ப வாழ முடியாது என்று தெரிந்து அவன் எதாவது ஒரு அதிசயம் நிகழாதா என்று எண்ணிக்கொண்டேயிருக்கிறான். அப்போது அவனுக்கு கிடைக்கும் ஒரு அதிசயமான ஆபத்து ஆனால் அந்த ஆபத்தை பயன்படுத்தி தற்சயம் இந்த மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு அருமையான காரணத்தை உருவாக்கிருக்கிறான்.

பூகம்ப சங்குகள் – இது கப்பலில் நிகழவிருக்கிற ஆபத்தை நான் இந்த பூகம்ப சங்குகளை என்மீது கட்டிக்கொண்டு கப்பலில் இருந்து வெளியில் குதித்துவிடுகிறேன் அதனால் இந்த கப்பல் ஆபத்தில் இருந்து தப்பித்துவிடும் நம்மை எதிர்நோக்கி வரும் அந்த நீல நகரம் சுக்குநூறாகிவிடும் என்று சொல்லி அங்கிருந்து குதித்துவிடுகிறான்.

அங்கிருந்தும், மரனத்திலிருந்தும் தப்பிக்க கிடைந்த இந்த வாய்ப்பினை எப்படியாவது பயன்படுத்திகொண்டு ஓடிவிட வேண்டும் என்றுதான் சூனியன் மனதில் ஓட்டம் ஓடுகிறது ஆனால் பூகம்ப சங்கை சுமந்து போகும் போது உயர் பிழைக்க வாய்ப்பிருக்கா இல்லையா என்ற சந்தேகம் அவன் மனதில் எழாமல் இல்லை…,

மீண்டும் சந்திப்போம் அடுத்த அத்தியாயத்துடன் சூனியக்காரன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பித்தானா இல்லையா?

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி