சூனியக்காரன் அந்த மிதக்கும் கப்பலிலிருந்து பூகம்ப சங்குடன் நீல நகரத்தை நோக்கி விரைந்தான், ஒரு வழியாக நீல நகரத்தில் பிரவேசித்தான். இந்த நிகழ்வு எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை, மிதக்கும் கப்பலிலிருந்து பறந்து வந்த சூனியக்காரன் நீல நகரினை பிளந்துகொண்டு வந்து உள்ளே பிரவேசித்தான் என்று நம்பித்தான் ஆக வேண்டும் ஏனெனில் அவன் சூனியக்காரன் அல்லவா அதனால் தான் அவன் அத்தனை வல்லமை பெற்றுள்ளான்.
நீலநகரத்தின் சுங்கச் சாவடியில் கிட்டத்தட்ட ஒரு பரதேசியைப் போலத் தனது கடவுச்சீட்டுடன் நீலநகருக்குள் நுழைவதற்க்கு வரிசையில் காத்திருக்கிறான் கோவிந்தசாமி. மிதக்கும் கப்பலில் எல்லோரும் காத்திருப்பார்கள் பாவம் இந்த சூனியக்காரன் தனது உயிரைத் தந்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறான் என்று ஆனால் நான் தான் இங்கே உயிருடன் வந்து சேர்த்துவிட்டேன் என்று யோசனையுடன் வரிசையில் நிற்கும் கோவிந்தசாமியின் மூளையைத் திறந்துபார்க்கும் சூனியக்காரன் பரிதாபப் படுகிறான் ஏன் இந்த மானிடன் பிறந்தது முதலே கொடுக்கப்பட்ட மூளையைப் பயன்படுத்தவே இல்லை என்று.
சூனியக்காரன் வழியே நாம் இந்த கோவிந்த சாமியின் வரலாறு தெரிந்து கொள்ள முடிகிறது. அவன் ஏழு வயதிருக்கும் அப்போது அவன் தகப்பன் விட்டு சென்றுவிட்டான் பின்னர் தாயும் வேறொரு திருமணம் செய்துகொண்டு இவனைக் கவனிக்கவில்லை. இந்த சோகத்தில் தான் கற்றுக்கொண்ட இறைவழிபாட்டையே முழுதும் பின்பற்றினான்.
காலங்கள் உருண்டோடுகிறது அதோடு சேர்ந்து கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்தசாமியும் பல்வேறு வேலைகளைச் செய்தும் ஒருவரின் உதவியால் பதம் வகுப்பு வரை படிக்கவும் செய்தான். ஒரு நாள் தூக்கத்தில் பாம்பன் சாமி கனவில் வந்து உபதேசங்கள் செய்தார். ஸ்வாமிகள் என்ன சொன்னாரோ தெரியவில்லை பஞ்சர் போடும் கடையில் நூறு ரூபாய் திருடிவிட்டு பாம்பன் ஸ்வாமிகள் நோக்கிப் பயன்பட்டான்.அங்கு காளியப்பனுக்கு உதவியாளனாகச் சேர்ந்து மூன்று வருஷம் நம்பிக்கை பத்திரமாக இருந்தான் ஆனால் பாம்பன் சாமி மீண்டு அவன் கனவில் வரவேயில்லை என்ற விரக்தியுடன் வேறு ஊரை நோக்கிச் சென்றான்.
ராமநாதபுரத்திலிருந்த ஜம்பு லிங்கத்திடம் அடைக்கலமாகிறான், இந்து உணர்வு உன் நாடி நரம்பெல்லாம் ஊடுருவி ஓர் சங்கியாக மாறவேண்டும் அதற்கா இந்த இரண்டு செங்கல்லை எடுத்துக் கொண்டு கரசேவைக்கு போ என்று கட்டளையிடுகிறார். ராம் ராம் என்ற மந்திரத்துடன் ரயிலில் அயோத்தியை நோக்கிப் புறப்படுகிறான் அங்கே தான் தனது கரைசேவையையும் மறந்து சாகரிகாவன் அழகில் அடைக்கலமாகிறான். கோமாளியைபோல ஒருவன் இருக்கிறானே என்று நினைத்த சாகரிகா கோவிந்தசாமியிடம் பேச்சுக்கொடுத்து அவளுக்குத் தேவைப்பட்ட கதைகளைப் பெற்றுக்கொள்கிறாள்.
இப்படியே இவர்கள் அயோத்தியினை நோக்கிப் பயணபடட்டும் நாம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.