• பசிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்துக்குள் உண்ணத்தொடங்கிவிட வேண்டும். தள்ளிப் போட்டால் காலக்கிரமத்தில் அல்சர் வரும்
• அரிசி ரகங்களில் சீரக சம்பா தவிர மற்றவை அத்தனை தரமில்லை
• கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு தவிர வேறெதுவும் வேண்டாம்
• உணவோடு பழங்கள் சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை வரும்
• காய்கறி சமைக்கும்போது புளியும் மிளகாயும் எவ்வளவு குறைவாகச் சேர்க்கிறோமோ, அவ்வளவு நல்லது
• மிளகாயைத் தவிர்ப்பது உத்தமம். மிளகு சிறப்பு
• கடுகு தாளிப்பு இல்லாதிருந்தால் விசேஷம்
• தாளித்தே தீரவேண்டுமென்றால் பசுநெய்யில் தாளிக்க
• எதற்குத் தாளித்தாலும் இரண்டு பல் வெங்காயம், பூண்டு சேர்ப்பது நல்லது
• உண்டியில் எண்ணெய் குறைந்தால் உடலில் வியாதி குறையும்
• தயிர் வேண்டாம். மோர் பரவாயில்லை
• பசி வராதவரை உண்ணாதீர். பசியில்லாத பொழுதில் உண்பது விஷமாகிறது
• கீரைகளை மதியம் உண்பது நல்லது
• எருமைப்பால், எருமைத்தயிர், செம்மறி ஆட்டுப்பால், கேழ்வரகு, தினை, சாமை, பருப்பு வகை, கடுகு அனைத்தையும் விலக்குக.
இவை அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் எழுதிய உணவுக் குறிப்புகள். வள்ளல் பெருமானுக்கு ஆரோக்கியமே முதல் அக்கறை. ருசியைப் பொருட்படுத்துவதில்லை.
களிப்புறு சுகமாம் உணவினைக்
கண்ட காலத்தும் உண்ட காலத்தும்
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் –
என்று பாடுகிறார்.
படிக்கப் படிக்க, எவ்வளவு தருகிறார்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.