ஒரு காதல், ஒரு கவிதை ஆகிய இவற்றைக் கொண்டு 17ஆவது அத்தியாயத்தை எழுதியுள்ளார் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள். அது கவிதையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது காதற்கவிதையா என்பதே இந்த அத்தியாயத்தில் வாசகர்கள் எதிர்பார்ப்பது. ‘காதலர்தினம்’ குறித்த விமர்சனம் ஒருபுறமிருந்தாலும் பேரிகை இதழ் குறித்துப் பேசும் போது தமிழ்ச் சிற்றிதழ்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டார் பா.ரா. பெரும்பாலான...
ஜேகே – அஞ்சலி
ஐந்தரைக்கு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், ஒரு ரெண்டவர் டைம் தர முடியும். அர்ஜெண்ட்டா ஒரு கதை தேவைப்படுது. சொல்ல முடியுமா?’ இந்தத் துறையில் இந்த அவசர அழைப்புகளுக்குப் பெரும்பாலும் எந்தப் பொருளும் கிடையாது. எதற்கு எப்போது விதித்திருக்கிறதோ, அப்போது அது தன்னால் நடக்கும். கதை என்ன, எதுவுமே இல்லாவிட்டாலும் நடக்கும். விதிக்கப்படவில்லையென்றால் என்ன முட்டுக் கொடுத்தாலும் அரை...
யதி – ஒரு மதிப்புரை (திவாகர். ஜெ)
“சாமியார்கள் பற்றிய நூல்கள் ஏதேனும் இதற்கு முன் வாசித்து இருக்கிறீர்களா? நான் ஒரே ஒரு நூல் தான் வாசித்து இருக்கிறேன். ”சாமியார்களின் திருவிளையாடல்கள்” என்ற நூல். அதில் போலிச் சாமியார்கள் குறித்தும், மண், பெண் என அத்தனையின் மீதும் அவர்கள் செய்த காவாலித்தனங்கள் குறித்தும் ஆதாரத்தோடு விளக்கப்பட்டிருக்கும். மற்றபடி, சாமியார்களுக்கும், நமக்கும் இப்போது உலகம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சமூக இடைவெளியை...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 2)
இதோ சூனியன் கிளம்பிவிட்டான்.அவனுக்காக எலும்புகள் கொண்டு செய்யப்பட்ட கப்பல் காத்திருக்கிறது. என்ன எலும்புகளால் ஆன கப்பலா? எனக்கேட்டால் அவன் சொல்வதைக் கேளுங்கள். “சூனியர்களின் உலகில் எலும்புகளுக்கு மதிப்பு அதிகம். வீட்டு விசேடங்களுக்கு ,விழாக்களுக்கு என எல்லா நிகழ்ச்சிகளிலும் எலும்புகள் அலங்காரம் இருக்கும்”.நாம் புராதானப் பொருட்களை சேர்த்து பாதுகாத்து வைப்பதைப்போல இவர்கள் புராதான...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 17)
ஒரு சங்கியாக இருப்பது எவ்வளவு கடினமென்று நம்மில் பெரும்பாலானோர் நேரில் பார்த்திருப்போம். அதுவும் தமிழ்நாட்டில் சங்கியாக இருப்பது மிகவும் கடினம். காவிச் சங்கி, வெள்ளை சங்கி, பச்சை சங்கி, நீலச் சங்கி, கருப்பு சங்கி வகைகளில் காவிச் சங்கியாய் கோவிந்தசாமி சிறப்பாக பொருந்துகிறான். அப்படியோர் காவிச்சங்கியாக அறியப்படுகிற கோவிந்தசாமியைப் பற்றி நாம் சூனியன் மூலமாக அறிந்திருக்கிறோம், சாகரிகா மூலமாக...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 14)
சூனியனுக்கு, பாராவின் மீது கடுங்கோபம் பொங்கி வழிகிறது. தன்னுடைய கதையைப் பாரா திசைத்திருப்ப முயல்வதாக எண்ணுகிறான். முகத்தை மாற்றிய கோவிந்தசாமி வெண்பலகையில் சாகரிகாவிற்கு ஒரு கவிதை(?!) எழுதுகிறான். அடடே! என்ன ஒரு அருமையான கவிதை, இதை படித்திருந்தால் சாகரிகா உடனே கோவிந்தசாமியோடு சேர்ந்திருப்பாள். அடுத்து அவன் எழுதும் பதிவை ஒரு நூற்று இருபது பேர் பகிரவும் செய்கிறார்கள். சூனியனும், நிழலும் அதிர்ச்சி...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 13)
‘முகக்கொட்டகை’ – நீல நகரத்தில் அதிசயங்களுக்கு அளவில்லாமல் இருக்கிறது. கோவிந்தசாமியின் எண் வெண்பலகையில் ஏற்றுக்கொள்ள படாததால், ஒரு நீல நகரவாசியிடம் தன் பிரச்சனையைச் சொல்லி முகத்தை மாற்றிக் கொள்ளும் வழியொன்றை தெரிந்துக் கொள்கிறான். நீலநகரத்தில் வாழ்ந்து இறந்துபோன மனிதர்களின் முகங்கள் அங்கே கிடைக்கும். அது தான் முகக்கொட்டகை. சட்டையைக் கழற்றி மாற்றுவது போல எந்த முகத்தை...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 12)
இந்த அத்தியாயத்தில் ஷில்பா என்னும் புதிய கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது. சாகரிகாவின் தோழியான ஷில்பா நம் கோவிந்தசாமியை எதேர்ச்சியாக சந்திக்க நேர்கிறது. அவளின் உதவியோடு நீலநகரத்து குடியுரிமை வாங்குகிறான். இருந்தாலும், சூனியன் கோவிந்தசாமியின் நிழலைக் கொண்டு முன்பே அவன் பெயரில் நீலநகரத்தின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதால், வெண்பலகை கோவிந்தசாமியின் எண்ணை ஏற்க மறுக்கிறது. சூனியனைத் தேடி இன்னும் பல...