Tagஅறிவிப்பு

பத்ரி நலமாக இருக்கிறார்!

இன்று காலை ஹிந்து நாளிதழின் நீத்தார் குறிப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்த பலபேர், அதிர்ச்சியடைந்து பத்ரிக்குத் தொலைபேசிய வண்ணம் உள்ளார்கள். ‘ஓ, நீங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீர்களா?’ என்று ஜோக்கடிப்போர் முதல், தமது அதிர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையில்லாமல் தவித்துத் திண்டாடுவோர் வரை அவர்களுள் பலவிதம். ஹிந்துவில் ‘காலமானார்’ என்று இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் பத்ரி சேஷாத்ரி வேறு யாரோ...

முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்

* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * இனி www.writerpara.net என்கிற இத்தளத்தின் உரல் www.writerpara.com/paper/ என்று இருக்கும். * சில காலம் வரை www.writerpara.net என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும். * இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற...

ஒரு பிரச்னை, ஓர் அறிவிப்பு

கடந்த இரு தினங்களாக இந்தத் தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் இருந்துவருகின்றன. தளம் தடை செய்யப்பட்டிருப்பதாக ஓர் அறிவிப்பு காட்டப்பட்டிருக்கும். சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. யாராவது நல்ல நண்பர்கள் விளையாடியிருக்கலாம். Hack செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று ஒருமுறை தளம் காணாமல் போக, கணேஷ் சந்திரா மீட்டுக் கொண்டு வந்தார். சில மணிநேரங்கள் சரியாக இருந்தது. இன்று மீண்டும் காலை முதல்...

ஓர் அறிவிப்பு

எங்களுடைய நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான சில புத்தகங்களை, விருப்பமுள்ள வாசகர்களுக்கு – மதிப்புரை எழுதுவதற்கென இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம். இது பற்றிய விரிவான தகவல்களை நீங்கள் பத்ரியின் வலைப்பதிவில் காணலாம். பின்வரும் புத்தகங்கள் முதல் கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன: 1. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா 2. ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் –...

ஓர் அறிவிப்பு

இந்தத் தளத்தின் வலப்பக்கத்தில் ஒரு புதிய பகுதியை நீங்கள் காணலாம். இனி [கூடியவரை] தினசரி ஒரு நல்ல பாடலை இங்கே வழங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் பேச்சு வடிவிலும்கூட. உரையாடலாகச் சில விஷயங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. யாருடனாவது உரையாடி, தொகுத்து வழங்கும் திட்டம். எல்லாம் என்னுடைய தொழில்நுட்ப [அஞ்]ஞானம் எத்தனை கைகொடுக்கிறது என்பதைப் பொறுத்தது. இன்னும் ஆடியோ...

கருத்துக்களம் திறக்கப்படுகிறது.

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வலைத்தளத்தின் வாசகர் கருத்துக் களம் [Comments Section] இன்றுமுதல் திறக்கப்படுகிறது. இத்தளத்தில் நான் எழுதத் தொடங்கிய நாளாக இதில் வாசகர் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான இடம் ஏன் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகவும் ஆதங்கமாகவும் கோரிக்கையாகவும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. நண்பர் வெங்கட் இதனை மிகத் தீவிரமாகக் கண்டித்துத் தம் பதிவு ஒன்றில் குறிப்பிட [என்ன...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me