இன்று காலை ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கேட்டார். நீங்கள் எழுதியவற்றுள் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல் என்றால் எதனைச் சொல்வீர்கள்? இறவான் அல்லது யதியைச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். உண்மையில் இந்தக் கணம் நினைத்துப் பார்க்கும்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதென்று அலகிலா விளையாட்டைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஒரு துறவி ஆகிவிட வேண்டும் என்ற வேட்கையுடன்...