ஆவணி அவஸ்தைகள்
பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் இப்படி தினமொரு திருமணம் அனுபவம் நேர்ந்ததில்லை. அல்லது, கூப்பிடுகிற அத்தனைபேர் வீட்டுக் கல்யாணத்துக்கும் போகிறவனாக நான் இருந்ததில்லை. இந்தவருஷம் நான் திருந்தியிருக்கவேண்டும். அல்லது ரொம்பக் கெட்டுப்போயிருக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த சில உத்தமோத்தமர்கள் இருக்கிறார்கள். இம்மாதிரி பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விசேடங்கள், விழாக்கள் என்று எதற்கு அழைப்பு வந்தாலும் குறித்து வைத்துக்கொண்டு, குறித்த தினத்தில், குறித்த நேரத்தில் அழகாக டிரெஸ் பண்ணிக்கொண்டு ஆஜராகிவிடக்கூடியவர்கள். இன்னும் சில உத்தமர்களையும் எனக்குத் தெரியும். அமெரிக்க ஜனாதிபதியே நேரில் வந்து கூப்பிட்டாலும் ஆபீசில் வேலை ஜாஸ்தி என்று சொல்லிவிட்டுப் போகாதிருந்துவிடும் கர்மயோகிகள்.Read More »ஆவணி அவஸ்தைகள்