அல் காயிதா தொடங்கி மத்தியக் கிழக்கின் அனைத்துப் போராளி இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் எழுதி முடித்து, இனி அங்கே வேறு யாரும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில் ஐஎஸ் (என்று இன்று அழைக்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ்) பிறந்தது. இராக்கில் ஐஎஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய 2003ம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வப்போது சிறு குறிப்புகளாக...
ருசியியல்
தமிழ் ஹிந்து நாளிதழில் நாளை முதல் (03/12/16) ஒரு பத்தி தொடங்குகிறேன். ருசியியல் என்ற தலைப்பில். சமையலின் ருசியும் வாழ்வின் ருசியும் வேறுவேறல்ல என்பது என் தீர்மானம். அந்தந்த தினத்தின் மனநிலையே அன்றன்றைய சமையலின் ருசியைத் தீர்மானிக்கிறது என்பதைப் பன்னெடுங்காலமாக கவனித்து வந்திருக்கிறேன். வாழ்வையும் உணவையும் மனமார நேசிப்பவன் நான். தவிரவும் உண்ணும் விஷயத்தில் ஒரு முழு வட்டம் சுற்றி மீண்ட அனுபவம்...
எனது புத்தகங்கள் – ஓர் அறிவிப்பு
கடையில் இல்லை, ஆன்லைனில் இல்லை, மின் நூலாக இல்லை, பதிப்பில் உள்ளதா, உங்களிடம் பிரதி கிடைக்குமா – என் புத்தகங்களைக் குறித்து சில காலமாகத் தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டு வருகிற இவ்வினாக்களுக்கு இங்கே விடை. இனி என்னுடைய அனைத்து நூல்களும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியிடப்படும். எப்போதும் அச்சில் இருக்கும். மிக விரைவில் மின் நூல்களாகவும் கிட்டும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஜனவரி 2017...
கன்சர்வேடிவ் பார்ப்பன ஹிந்துத்துவ வலது சாரி திராவிட துவேஷி ஆணாதிக்கவாதி
சரியாக ஒரு மண்டலகாலத்துக்கு நீண்ட தினமலர் தேர்தல் களம் பத்தி இன்றோடு நிறைவு பெறுகிறது. தினமலர் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் தினமலரில் இதனை நான் எழுதக் காரணமாக இருந்த நண்பர் சொக்கலிங்கத்துக்கும் என் நன்றி.
என் இனிய தோழியே
ராஜ் டிவியில் நாள்தோறும் இரவு 9.30க்கு (திங்கள் முதல் வெள்ளி வரை) ஒளிபரப்பாகும் என் இனிய தோழியே தொடருக்குத் திரைக்கதை எழுத ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தில் எனக்கு முதல் புதிய தொடர் இது. சென்ற வருடம் கிளி பாதியில் உயிரை விட்டது குறித்து வருத்தப்பட்டிருந்தேன். செல்லக்கிளியை இயக்கிய செந்தில்குமார்தான் இந்தத் தொடரை இயக்குகிறார். செந்திலுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
புதிய பதிப்பு
மேற்கண்ட எனது சில புத்தகங்கள் மதி நிலையம் வாயிலாகத் தற்போது மறு பிரசுரம் கண்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் இன்னும் சில புத்தகங்கள் இவ்வாறாக வரும் என்று நினைக்கிறேன். பிரதி வேண்டுவோர் mathinilayambook@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி உடனே வருவது இந்நாள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. என்.எச்.எம்...
மறுபதிப்பு குறித்த ஒரு மறுபதிப்பு
எனது மாயவலை மறுபதிப்பு தயாராகிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துவிடும். [மதிநிலையம் வெளியீடு]. 750 முதல் 900 வரை நல்ல மார்க்கெட்டிலும் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கள்ள மார்க்கெட்டிலும் [பின்னது பிரதிகள் மட்டும்] விலை போய்க்கொண்டிருந்த இக்காவியமானது மக்கள் பதிப்பு – மலிவுப் பதிப்பாக வெறும் ரூ. 500க்கு கிடைக்கும் என்பது இனிக்கும் சேதி. இவ்வினிப்புக்கு இனிப்பு சேர்க்க பதிப்பாளரானவர்...
அஞ்சல் வழித் துன்பம்
எனது குறுவரிக் குப்பத்தில் கொட்டுகிற ரத்தினக் குப்பைகளை உடனுக்குடன் வாசித்து மகிழ்வதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகள் குறித்து வாசகர்கள் அவ்வப்போது வருத்தம் தெரிவித்து வந்தார்கள். தளத்துக்கு நேரில் வந்து வாசிப்பது சிரமம், இங்கே எழுதுவது நேரடியாக ட்விட்டருக்கு வந்து விழும்படிச் செய்யமுடியுமா என்று கேட்டார்கள். இதென்ன போங்காட்டம்? ட்விட்டருக்கு மட்டும் போகலாம், இங்கே வரமுடியாதா? அதான் ஆர்.எஸ்.எஸ்...