எண்பத்திரண்டு வயதான ரங்கநாயகி அம்மாளுக்கு திடீரென்று சமீபத்தில் ஒருநாள் நினைவு தவறிப்போனது. நினைவு தவறிக்கொண்டிருந்த வினாடிகளில் தன்னுடைய பர்ஸ் எங்கே இருக்கிறது; உள்ளே எத்தனை பணம் இருக்கிறது என்கிற இரண்டு விவரங்களையும் – தற்செயலாக அருகில் அப்போதிருந்த தன் மூத்த மகளிடம் சொல்லியபடியே மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு எடுத்துப் போனார்கள். ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துபோனது காரணம் என்று...