Categoryபுத்தகம்

அருள் கூடிப் பொங்கிப் பொழிதல்

அவரை நினைக்கும்தோறும் அப்பா என்றுதான் மனத்துக்குள் அழைப்பேன். ஏன் என்று தெரியாது. தோற்றத்தில் என் அப்பா அவரைப் போன்றவரில்லை. வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. என் அப்பாவுக்கு சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றித் தெரிந்திருந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் எனக்கு அப்பா உறவுதான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதனை எழுத அமரும்போது காரணம் யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பாவைப் போல என் சிறுமைகளைச்...

சன் டிவி பேட்டி

புத்தகக் காட்சியை முன்னிட்டு சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஒரு பேட்டிக்கு அழைத்திருந்தார்கள். நேற்று (பிப்ரவரி 23) ஒளிபரப்பான அந்நிகழ்ச்சி இன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. கீழே அதனைக் காணலாம்.

சென்னை புத்தகக் காட்சி 2022

சென்னை புத்தகக் காட்சி 2022 இன்று தொடங்குகிறது. வழக்கம் போல ஜனவரியில் திட்டமிடப்பட்டு, அது தள்ளிப் போனபோது ஒரு திருமணம் ஒத்தி வைக்கப்பட்ட உணர்வே இருந்தது. வெளியே சொல்ல முடியாத துக்கம்; மனச் சோர்வு. கழுவித் தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டு, வலுக்கட்டாயமாகச் சில காரியங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தேன். ஆன்லைன் புத்தக ஆர்டர்களுக்கு ஒரு...

விலைப் பட்டியல்

இந்த வருட சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் என்னுடைய 55 புத்தகங்கள் இருக்கும். இவற்றுள் புதிய புத்தகங்கள் மொத்தம் ஆறு. பலபேர் திரும்பத் திரும்பக் கேட்டதால் அனைத்துக்குமான விலை விவரங்களை இங்கே தருகிறேன். ஒரு கேட்லாக் போலவோ, பிட் நோட்டீஸ் போலவோ இதை வடிவமைத்துத் தயார் செய்ய எனக்கு வக்குமில்லை; நேரமும் இல்லை என்பதால் பட்டியலாக மட்டும். — புதிய புத்தகங்கள் கபடவேடதாரி (நாவல்)  ₹530...

மூத்த அகதி

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து நிறைய படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். சில பலருடன் பழகவும் செய்கிறோம். என்றாவது அந்த வாழ்க்கையை, அதன் சிரமங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோமா? குடியுரிமை பெற்று இன்னொரு தேசத்தில் வாழ்வது வேறு. அகதி வாழ்க்கை என்பது வேறு. அதிலும், நகரில் வாழும் அகதிகளின் வாழ்வும் முகாம்களில் வாழ்வோரின் வாழ்வும் வேறு. வாசு முருகவேலின் ‘மூத்த...

நன்றி கெட்டவன் வாக்குமூலம்

நேற்றைய கலவரத்துக்கு சாட்சி ஆனவர்களுக்கு ஒரு சொல். அச்சுப் புத்தகம் – கிண்டில் இரண்டையும் நான் சமமாக மதிப்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். அச்சு நூல்களைக் காட்டிலும் கிண்டில் புத்தகங்களின் விலை ஏன் குறைவாக இருக்கிறது; எதனால் அதில் வாசிப்பது நல்லது என்று என்னைவிட விரிவாக எழுதிய இன்னொரு எழுத்தாளர் இங்கே கிடையாது. கிண்டில் என்பது காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வந்திருக்கும் ஒரு நவீன...

ஒரு சமர்ப்பணப் பிரச்னை

ஜெயமோகனின் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும்போதும் அதை அவர் யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று முதலில் பார்ப்பேன். நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் எழுதிக்கொண்டே இருப்பதில் எனக்கு வியப்பில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் என்ன செய்வானோ அதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய அவருக்கு எப்படியோ யாரோ ஒருவர் இருந்துவிடுகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை என். சொக்கன்...

படித்தவன்

இன்று புத்தக தினம். நான் படித்த லட்சணத்தைச் சற்று நினைவுகூர்ந்து பார்த்தேன். பள்ளி, கல்லூரி நாள்களில் பாடப் புத்தகங்களை அவ்வளவாக விரும்பியதில்லை. வரலாறு, புவியியல் பிடிக்கும். ஆங்கிலத்தில் நான் – டீடெய்ல் புத்தகம் பிடிக்கும். தமிழ் பிடிக்காதா என்றால் பள்ளிக்கூடத் தமிழ்ப் புத்தகங்கள் அன்று எனக்குக் கொள்ளிவாய்ப் பிசாசுகளாகத்தான் தெரிந்தன. அது என்னால் விரும்ப முடியாத தமிழாக இருந்தது...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!