Categoryபுத்தகம்

ஐந்து புத்தகங்கள்

இன்று சர்வதேச புத்தக தினம். இந்நாளில் ஐந்து புத்தகங்களை எண்ணிக்கொள்கிறேன். 1. ஜனனி – லாசரா எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த முதல் புத்தகம். லாசராவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான கவிஞர் நா.சீ வரதராஜன் எனக்கு இதைக் கொடுத்து, படிக்கச் சொன்னார். முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜனனியின் அருமை புரியவில்லை. அந்தப் பிரதியின் முக்கியத்துவமும் தெரியாது [முதல் பதிப்பின் இரண்டாவது பிரதி அது...

பூனைக்கதை – ஹரன் பிரசன்னா மதிப்புரை

பா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது புத்தகங்களைப் பற்றிய என் வெளிப்படையான கருத்துகளை வைத்துள்ளேன். பாராவின் மிக முக்கியப் பண்பு, எந்த ஒரு சிறு நெருடலும் இன்றி, அவற்றை என்...

சிமிழ்க்கடல்

எனக்கு மட்டும் எழுத வராமல் போயிருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வேன். முன்பெல்லாம் ஒரு துறவியாக, அல்லது ஒரு பொறுக்கியாக ஆகியிருப்பேன் என்று தோன்றும். அந்த இரண்டாவது சிந்தனை இப்போது இல்லை. மிக நிச்சயமாக ஒரு பொறுக்கியாகத்தான் போயிருப்பேன். சிறு வயது முதலே என் அந்தரங்க விருப்பம் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் வகுப்பில் இருந்தபோது என்னோடு படித்த...

வெஜ் பேலியோ – அனுபவக் குறிப்புகள்

வெஜ் பேலியோ தொடர்பாக இணையத்தில் நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்’ கிழக்கு பதிப்பகம் மூலம் வருகிற சென்னை புத்தகக் காட்சியில் நூலாக வெளியாகிறது. இந்தப் புத்தகத்துக்கு ஒரு விசேடம். இக்கட்டுரைத் தொகுப்பை நான் முதலில் மின் நூலாக அமேசானில் வெளியிட்டேன். ஒரு சில மாதங்களிலேயே மிக நல்ல விற்பனை உயரம் தொட்டது. மின் நூலாக வெளியிட்ட ஒன்றின் இரண்டாம் பதிப்பை அச்சுப்...

ருசியியல் – கலந்துரையாடல்

ஜனவரி 1, 2018 திங்கள் கிழமை அன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் [கேகே நகர், சென்னை] நடைபெறும் வாசகர் கலந்துரையாடலில் பங்குபெறுகிறேன். ருசியியல் என்பது பொதுவான தலைப்பு. இந்தத் தலைப்பில் என் புத்தகம் வெளிவருவது ஒரு காரணம் மட்டுமே. நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எது குறித்தும் விவாதிக்கலாம். நண்பர் வேடியப்பனின் ஆர்வமே இந்நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணம். வாசக நண்பர்களை இந்நிகழ்ச்சியில்...

பால்ய கால சதி

இது என் பால்யம். எல்லாமே நடந்ததா என்றால், யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும் என்பதே என் பதில். இந்தக் கதையில் நான் இருக்கிறேன். நிறையவே இருக்கிறேன். என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றுவரை என்னோடு தொடர்பில் இருப்பவர்கள்.  எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசிக்கொள்ள இந்தக் கதை இன்னமும் எதையோ ஒன்றைப் புதிதாக எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது...

ருசியியல் – முன்னுரை

பல வருடங்களுக்கு முன்பு குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் உணவின் வரலாறை ஒரு தொடராக எழுதினேன். மனிதன் முதல் முதலில் தேனை ருசித்துப் பார்த்த காலம் முதல் நவீன மனிதன் பீட்ஸா, பர்க்கரிடம் சரணடைந்த காலம் வரையிலான கதை. உணவைப் பற்றிப் பேச இவ்வளவு இருக்கிறதா என்று கேட்டார்கள். அந்தத் தொடர் கண்ட வெற்றி, பிறகு அது ஒரு தொலைக்காட்சி ஆவணப் படத் தொடராக மறு பிறப்பெடுக்க வழி செய்தது. சென்ற வருடம் தி இந்துவின் ஆசிரியர்...

புதிய புத்தகங்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்

ஜனவரி 2018 சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய மூன்று நூல்களை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. 1. பூனைக்கதை – புதிய நாவல் 2. ருசியியல் – தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு 3. சிமிழ்க்கடல் – பூனைக்கதைக்கு முன்பு நான் எழுதிய எட்டு நாவல்களின் பெருந்தொகுப்பு. இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ. 1500. இதற்கு கிழக்கு முன் வெளியீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. டிசம்பர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter