[கல்கியில் வெளியான அந்த கிரிக்கெட் கட்டுரை இதுதான். ஏதோ ஓர் உலகக்கோப்பை சமயம் எழுதியிருக்கிறேன். வருஷம் நினைவில்லை. போட்டியின் இறுதியில் கேப்டன் கங்குலி வீட்டில் ரசிகர்கள் கல்லெறிந்த காலம்.] இந்தவாட்டி வேர்ல்டு கப் இந்தியர்களைப் பொறுத்த அளவில் “ஹைலைட்ஸ் பார்க்கக் கூட லாயக்கில்லாத” சங்கதியாகிவிட்டதை துரதிருஷ்டம் என்றெல்லாம் அநாவசியத்துக்கு வருணிப்பது தப்பு. ஒரே சொல் தான் – ...
பாதி வித்வான்
[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் – வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட் கட்டுரை கல்கியில் வெளியானது...
நாலு ரன், ரெண்டு விக்கெட்
மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை – வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் – வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். அலுப்பில் அப்போது உறங்கிவிட்டாலும் காலை...
சுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு!
[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத் தவிர்த்துவிட்டு, அவனது கட்டுரையை...
சுப்ரமணியபுரம்
படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம். கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம். உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய அதிர்ச்சியையும் நிறைய அலுப்பையும்...
இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்
சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது. அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார். ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை. இருவரின் நோக்கமும் என்னவாக இருந்தாலும்...
மெல்லினம் – சில குறிப்புகள்
நேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து...
பல்லே பல்லே…
நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும். பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி போல ரொட்டிகளைச் சுட்டுப் போட்டுக்கொண்டே...