ஆசை யாரை விட்டது? கலைஞருக்கு நோபல் பரிசு வேண்டியிருக்கிறது. பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் இதற்காகப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு. குழுவில் கலைஞரின் பேத்தி கயல்விழியும் ஒருவர். மிகச் சமீபத்தில் மேடைக்கு வந்தவர் இந்தப் பேத்தி. தவிர சில கல்வியாளர்கள், கவிஞர்கள், ஒரு கவிப்பேரரசர். இந்தப் பன்னிரண்டு பேரும் கலைஞரின் எழுத்தோவியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு...
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008
* நெய்வேலி புத்தகக் கண்காட்சி [பொதுவாகவே எந்த ஊர் புத்தகக் கண்காட்சியும் வெள்ளிக்கிழமைகளில்தான் தொடங்கும். ஒரு சனி, ஞாயிறை முழுமையாகப் பயன்படுத்த அது ஒரு சௌகரியம்] ஒரு மாறுதலுக்கு இம்முறை சனிக்கிழமை மாலை தொடங்கியது. வண்ணமயமான வரவேற்பு வளைவு, அபாரமான அரங்க ஏற்பாடுகள், பிரமிப்பூட்டிய டாய்லெட் வசதி. என்.எல்.சி. மெனக்கெடுகிறது. * பல சீனியர் பதிப்பகங்கள் இம்முறை கலந்துகொள்ளவில்லை. ஆனால் ப்ராக்ஸி...
புலி[க்குட்டி] வருது
ஆம். கிழக்கில் இருந்தல்ல. Prodigy சார்பாக எங்களுடைய முதல் பத்திரிகையை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை [06.07.2008] நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எங்களுடைய Prodigy ‘மேதை’ வெளியிடப்படுகிறது. இது ஒரு மாதப் பத்திரிகை. குழந்தைகள்-சிறுவர்கள்-இளைஞர்களின் பொது அறிவுக்கு விருந்தளிக்கும் இதழாக வெளிவரப்போகிறது. ஐந்து ரூபாய் விலை. ‘ப்ராடிஜி புக் க்ளப்’ என்று...
சில சந்தேகங்கள், சில விளக்கங்கள்
[1] கடந்த சில தினங்களாக என்னுடைய தளத்துக்குள்ளே வருகிற சிலர் ‘காமக் கதைகள்’ என்றும் சித்ரா மாமி என்றும் சரோஜா தேவி என்றும் சிலுக்கு என்றும் குறிச்சொற்கள் இட்டுத் தேடுகிறார்கள். எங்கோ தவறு நடந்திருக்கிறது. பா. ராகவன் பலான எழுத்தாளர் என்று யாரோ நல்லவர்கள் இவர்களுக்குச் சொல்லியிருக்கலாம். எம்பெருமான் அவர்களை மன்னிப்பாராக. கூகுளில் காமக்கதைகள் என்று தேடியும் என்னுடைய தளத்துக்குச் சிலர்...
எனக்கொரு விருது
இதைவிட சந்தோஷமாக எப்போதும் நான் உணர்ந்ததில்லை. முதல் முதலாக என்னுடைய மாணவன் ஒருவனின் புத்தகத்துக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. ஆர். முத்துக்குமார் எழுதி கிழக்கு கடந்த ஆண்டு வெளியிட்ட ‘அன்புள்ள ஜீவா’ என்கிற ப. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புச் செம்மல் மெய்யப்பன் நினைவு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது மணிவாசகர் பதிப்பகம் ஆண்டுதோறும் வழங்கும் விருது. கே.ஜி. ராதாமணாளன்...
ஞான் அவிடெ…
ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக்...
தசாவதாரம் குருவி-2
உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ ஒரு நாசகார ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டும்...