ArchiveDecember 2017

ருசியியல் – கலந்துரையாடல்

ஜனவரி 1, 2018 திங்கள் கிழமை அன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் [கேகே நகர், சென்னை] நடைபெறும் வாசகர் கலந்துரையாடலில் பங்குபெறுகிறேன். ருசியியல் என்பது பொதுவான தலைப்பு. இந்தத் தலைப்பில் என் புத்தகம் வெளிவருவது ஒரு காரணம் மட்டுமே. நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எது குறித்தும் விவாதிக்கலாம். நண்பர் வேடியப்பனின் ஆர்வமே இந்நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணம். வாசக நண்பர்களை இந்நிகழ்ச்சியில்...

கரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]

கோல்கொண்டா கோட்டை விழுந்துவிட்டது என்று ஜமீந்தார் சீட்டு அனுப்பியிருந்தார். எப்படியும் ஒரு மண்டலத்துக்குள் ஔரங்கஜேப் தொண்டை நாட்டைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து தஞ்சை வந்து சேர அவனுக்கு அதிக அவகாசம் எடுக்கப் போவதில்லை. மராட்டி ராஜா, ராமநாதபுரத்துக்குப் போய் பதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாகச் சேதி வருகிறது. வருபவனுக்கு வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போவதா, கழட்டி எடுத்துவைத்துவிட்டுப்...

பேய் ஊட்டிவிட்ட பிரியாணி [பூனைக்கதை டிரெய்லர்-2]

வடபழனி பஸ் ஸ்டாண்டின் கடைசி வரிசை பெஞ்சில் மயில்சாமி அமர்ந்திருந்தான். மதிய நேரம் என்பதால் ஆட்கள் அதிகம் இல்லை. பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர்களும் கண்டக்டர்களும் சாப்பிடப் போயிருந்தார்கள். ஒவ்வொரு வரிசை பெஞ்சிலும் யாராவது ஒருவர் படுத்திருந்தார். ஈ மொய்ப்பதைப் பொறுத்துக்கொள்ளலாம் என்றால் மதியத் தூக்கத்துக்கு வடபழனி பேருந்து நிலைய பெஞ்சுகளைவிடச் சிறந்த இடம் வேறு கிடையாது. பின்புறச் சாக்கடை...

இந்த வருடம் என்ன செய்தேன்? – 2017

இப்போதெல்லாம் ஒரு வருடத்துக்கும் இன்னொரு வருடத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. ஒரு கட்டத்துக்கு அப்பால் வாழ்க்கையே இந்த மாதிரி தன்னியல்பான வடிவம் எய்திவிடும் போலிருக்கிறது. துயரங்களின் அளவு மட்டும் சிறு வித்தியாசம் காட்டுகிறது. ஒரு வருடம் அதிகமாக. இன்னொரு வருடம் சற்றுக் குறைவாக. ஒன்றும் பிரச்னையில்லை. வாழ்வது ஒன்றும் அத்தனை சிரமமானதல்ல. இந்த வருடம் சில மரணங்கள் என்னை மிகவும் பாதித்தன...

யூமா வாசுகிக்கு வாழ்த்து

இவ்வாண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருது யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான படைப்பாளி, பொருத்தமான தேர்வு. யூமா வாசுகிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மலையாளத்தில் மிகப் பிரபலமான நாவல்களுள் ஒன்று ஓ.வி. விஜயனின் கசாக்கின் இதிகாசம். யூமா இதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சற்றும் நெருடாத, பிழைகளில்லாத, தேர்ந்த ஆக்கம் அது. யூமா எப்போது மொழியாக்கத் துறைக்குச் சென்றார் என்று...

பால்ய கால சதி

இது என் பால்யம். எல்லாமே நடந்ததா என்றால், யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும் என்பதே என் பதில். இந்தக் கதையில் நான் இருக்கிறேன். நிறையவே இருக்கிறேன். என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றுவரை என்னோடு தொடர்பில் இருப்பவர்கள்.  எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசிக்கொள்ள இந்தக் கதை இன்னமும் எதையோ ஒன்றைப் புதிதாக எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது...

பக்தி எனும் கொண்டாட்டம்

ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கும் என் நண்பர் சுவாமி சுதாமா தாஸின் அழைப்பின்பேரில் பிரபுபாதா குறித்த டாகுமெண்டரி படம் ஒன்றைக் காண திருசூலம் பிவிஆருக்குப் போயிருந்தேன். [இந்தத் திரையரங்கைப் பல வருடங்களாகக் கட்டிக்கொண்டிருந்தது தெரியும். எப்போது திறந்தார்கள் என்று தெரியவில்லை. நன்றாகவே இருக்கிறது.] பிரபுபாதா, தனது எழுபது வயதுவரை இந்தியாவில் வாழ்ந்து முடித்துவிட்டு அதன்பின் துறவறம் மேற்கொண்டு...

அஞ்சலி: முத்துராமன்

காசு பணம், சிகிச்சை, ஒட்டு, உறவு, நட்பு, கலை, இலக்கியக கசுமாலம் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
முத்துராமன்தான் செத்துப் போனான்.
இந்தக் கட்டுரையைப் படியுங்கள். ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். இத்தனைக் காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறான்.

இன்று விடுதலை.

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!