பிறந்து வளர்ந்த சென்னைக்குள் என்னை அந்நியனாக உணரச்செய்யும் ஒரே தலம் என்கிற வகையில் எனக்கு அந்த ஷாப்பிங் மால் ஒரு முக்கியமான க்ஷேத்திரம். தீராத பிரமிப்புடன் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். என்ன இது, எப்படி இது என்று ஒவ்வொருமுறையும் வியந்தே போகிறேன். நமக்கான இடமல்ல இது என்று எப்போதும் உறுத்தினாலும், அவகாசம் கிடைத்தால் போய்ப்பார்க்கலாம் என்றே அடிக்கடி தோன்றுகிறது. அவுட் டோர் ஷூட்டிங்குக்கு...