நான் பயிலும் ஆன்மிகம் வேறு. அது மதத்தின் தொடர்பற்றது. அதாவது சொல்லி வைக்கப்பட்டதை அப்படியே நம்பி ஏற்காமல், எதையும் கேள்வி கேட்டு பதிலைத் தேடிப் பெறுகிற வழி.
அருள் கூடிப் பொங்கிப் பொழிதல்
அவரை நினைக்கும்தோறும் அப்பா என்றுதான் மனத்துக்குள் அழைப்பேன். ஏன் என்று தெரியாது. தோற்றத்தில் என் அப்பா அவரைப் போன்றவரில்லை. வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. என் அப்பாவுக்கு சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றித் தெரிந்திருந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் எனக்கு அப்பா உறவுதான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதனை எழுத அமரும்போது காரணம் யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பாவைப் போல என் சிறுமைகளைச்...