இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்

ஜனவரி 4, 2011 அன்று தொடங்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியின் அரங்க வடிவமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. F 13,14,15 ஆகியவை கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடை எண்கள். கீழே வரைபடம் உள்ளது. வேறு சில முக்கியமான பதிப்பு நிறுவனங்களின் கடைகள் உள்ள இடங்களும் அதில் சுட்டப்பட்டிருக்கின்றன. வாசகர்களை சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த முறை கிழக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளின் இருப்பிடம் சிறப்பாக இருந்தாலும் எப்போதும் எனக்கு வாய்க்கும் சந்திப்பு சந்து இம்முறை சரியாக அமையவில்லை. எனவே கிழக்கு அரங்கினை ஒட்டிய பக்கவாட்டுச் சந்தில் வழக்கம்போல் சந்திப்புகள் உண்டா, அல்லது வேறு லொக்கேஷனா என்பதுபோன்ற அதி முக்கிய விவரங்களைப் பிறகு தருகிறேன்.

Share

12 comments

  • நன்று! கேண்டீன் எங்கே என்றும் கொஞ்சம் வண்ணத்தில் போட்டிருக்கலாம். (உபரி கேள்வி: வைகுண்டத்தில் சைவம் கிடைக்குமா? இல்லையேல் புளியோதரையும் தயிர்சாதமும் கட்டிக்கொண்டு வர வேண்டும்) 🙂

    • நடராஜன்: கேண்டீன் எப்போதும் அரங்குக்கு வெளியே சற்றுத் தள்ளி இருக்கும். இந்த மேப் அரங்கின் உள்ளே உள்ளவற்றை மட்டும் காட்டுவது.

  • எப்போதும் எனக்கு வாய்க்கும் சந்திப்பு சந்து இம்முறை சரியாக அமையவில்லை. எனவே கிழக்கு அரங்கினை ஒட்டிய பக்கவாட்டுச் சந்தில் வழக்கம்போல் சந்திப்புகள் உண்டா, அல்லது வேறு லொக்கேஷனா என்பதுபோன்ற அதி முக்கிய விவரங்களைப் பிறகு தருகிறேன்.
    // சந்துல சிந்து பாடவா ஐயா

  • சந்து சந்திப்புக்கள் 2011 அப்படின்னு டெய்லி அப்டேட்ஸ் வரும் என்ற #அவதானிப்பு’டன்

    2011 சென்னை புக்குபேரு கொண்டாட்டங்கள் பற்றிய அப்டேட் பதிவுகளுக்கு வந்தமர்கிறோம் – துண்டு போட்டாச்:)

  • மற்றவர்களுக்கெல்லாம்விட கிழக்கின் கடை அளவு பெரிதாக இருக்கிறதே? நடத்துங்கள் 😉

  • இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் – என்பது திருவரங்கத்தமுதனார் எழுதிய இராமானுச நூற்றந்தாதியில் வரும் அருமையான சொற்றொடர்.

  • யாராச்சும் யாரு எவளவு டிஸ்கவுன்ட் கொடுக்குறாங்கன்னு இங்க ஆரம்பிச்சு வையுங்கப்பா !!
    பட்ஜெட் போடவசதியா!!

    சஹ்ரிதயன்

  • திரு.பத்ரி,

    ஒரு வேண்டுகோள்.

    கண்காட்சி இயங்கும் 15 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் ரூ.250 வைக்கவும்.இதில் 4 பேர்களை அனுமதிக்கலாம்.உள்ளே அவர்கள் இந்த துகைக்கு எந்த புத்தகங்கள் வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம்.

    நன்றி.

    பி.கு:இவ்வாறு சில யோசனைகளை BAPASI க்கு ஏற்கனவே தெரிவித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உங்களை அணுகுகிறேன்

    • கண்பத்: பத்ரி என் தளத்தின் கமெண்டுகளையெல்லாம் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. எதற்கும் இதன் காப்பியை தாட்ஸிண்டமிழில் போட்டுவையுங்கள். மின்னஞ்சல் மாதிரி கமெண்ட்ஸ் ஃபார்வர்ட் தொழில்நுட்பமும் இருந்தால் இதற்கெல்லாம் வசதியாக இருக்கும்.

  • மன்னிக்கவும்.இந்த பதிவுக்கான லிங்க் எனக்கு பத்ரி தளத்தில் கிடைத்தது.எனவே இதுவும் பத்ரி பதிவுதான் என்று தவறாக நினைத்து அவருக்கு முகமன் எழுதிவிட்டேன்.பதிலுக்கு நன்றி.
    நான் கூறியுள்ள யோசனை உங்களுக்கு சரியாகப்பட்டால் நீங்களே அதை BAPASI கவனத்திற்கு கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதை நான் பத்ரியின் தளத்திலும் பதிவு செய்கிறேன்

  • வணக்கம் பா.ரா,

    F 13,F 14,F 15 என்று பக்கத்திலேயே மூன்று கடைகள் கிடைத்துள்ளன.

    குலுக்கலில் தான் கிடைத்தா ? அல்லது வேறு விசேட கவனிப்பு மூலம் கிடைத்தா ?

    அறியத்தாருங்களேன்.

    – து.குமரேசன்

    • து.குமரேசன்: நாங்கள் ஸ்பான்சர் செய்திருக்கிறோம். ஸ்பான்சர்ஷிப் ஸ்டால்களாகக் கிடைத்தவை அவை. குலுக்கலில் அல்ல.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி