மகிழ்ச்சிப் பா.

ஊசிமணி விற்கவில்லை
உசிலைமணி நடிக்கவில்லை
தூசிமண் கண்ணில் படநீ
துயருற்று நடக்கலாமோ.
காசெடுத்து வந்தோரெல்லாம்
கால் கடுக்கச் சுற்ற வேண்டாம்
பேசுகிற பெரியோர்க்கெல்லாம்
பெரியதோர் வணக்கம் போடு.

மேடையில் வீற்றிருக்கும்
மேன்மைசால் மேதைக் கெல்லாம்
கோடையில் குளிர்ச்சியாக
கோலாவைக் காதில் ஊற்று
மாடல்ல மக்கள் எல்லாம்
மதிபெற்ற ஞானவெய்யோன்
ஏடெல்லாம் உள்ளிருக்கு
எடுப்போரே இங்கிருப்பீர்

புத்தகக் காட்சி யென்றால்
புத்தகம் வாங்க வேண்டாம்
அத்தனை அறிவும் இங்கே
அரைத்து உம் செவியில் ஊற்ற
வித்தக வேந்த ரெல்லாம்
விரைந்தோடி வந்தார் காணீர்
மொத்தமாய் எழுந்து நின்று
முகமலர வாழ்த்து வீரே.

பிகு: இன்றைய கிழக்கு டாப் 5 – ஆர்.எஸ்.எஸ்., ராஜராஜ சோழன், முதல் உலகப்போர், கிளியோபாட்ரா, ராஜிவ் கொலை வழக்கு.

Share

14 comments

  • பால்கோவா இன்னிக்கு அதிகமோ?

    பா எல்லாம் கலை கட்டுதே ;)))

  • Think Positively.

    வரவழைக்க அது தேவைப்படலாம்
    வந்தவர்களில் சிலர் அங்குசெல்லலாம்
    ஆராயாமல் வேண்டாமென எப்படி சொல்லலாம்

  • மகிழ்ச்சிப் பா(ரா)

    ஆர்.எஸ்.எஸ்
    முதலிடத்தில் 🙂

  • இன்றைய டாப் செல்லிங் புக்ஸ் பட்டியலினை விட அதிக ஆர்வம் கொண்டிருப்பது, மேடையில் வீற்றிருந்தவர்களை பற்றி அறிய… 🙂

  • அட, இது என்ன பாரா! கவிதைப் பிடிக்காத நீங்களா இப்படி ஒரு சந்தக்கவிதை எழுதியுள்ளீர்கள்!! சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கவிதைக்கு ந்ன்றி.

  • வாவ்! கோபத்தில் கவிதை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதா! நடத்துங்கள். உங்கள் கவிதை சொலும் செய்தியைவிட நீங்கள் போட்டிருக்கும் புகைபடமே புரியவைத்துவிட்டது!

  • விஜய்சங்கர்: கவிதை பிடிக்காது என்று நானெப்போது சொன்னேன்? கிவிதைதான் எனக்குப் பிடிக்காது.

  • லட்சுமிப்ரபா: //உங்கள் கவிதை சொலும் செய்தியைவிட// இருக்கலாம். நான் கவிஞன் இல்லை என்பது எனக்கே தெரியும். ஆனால் நான் என் டப்பா மொபைலில் எடுத்த புகைப்படத்தைப் பாராட்டினீர்கள் பாருங்கள்! புல்லரித்துவிட்டது. அதுதான் கவிதை. கீழே உள்ளது வெறும் கேப்ஷன் 😉

  • // கிவிதைதான் எனக்குப் பிடிக்காது.//

    அதென்ன

    கிவிதை – அருஞ்சொற்பெருள் விளக்கம் தருக

    (மதிப்பெண் – 2 பாக்கெட் பால்கோவா)

  • ஏற்கனவே நீங்க எழுதிய இளையராஜாவைப்பற்றி பெருந்தகையீர் புகழ்ந்து பாடிய பாடல்களுக்கும் இதுக்கும் ஏதும் சம்மந்தம் உண்டா? கொல வெறியில எழுதினாலும் காதலியின் கூந்தலை தடவி பார்க்கும் சுகம்.

  • மூன்று பாரா எழுதிவிட்டீர்
    முச்சூடும் முத்துப் பாக்கள்
    கவிஞனோ இல்லை யென்றீர்
    காரணம் யாதோ சொல்வீர்!

    பாராக்கள் நிறைய எழுதி
    பாராட்டுப் பெற்ற பாரா
    கவிதைக்கே பொய் அழகாம்
    கவிஞனுக் கல்ல அறிவீர்!

    கண்காட்சி காண எண்ணித்
    திட்டங்கள் தீட்டி வைத்தேன்
    காசுதரும் வேலை வந்து
    திட்டத்தைத் தட்டியது காண்!

    பத்ரியார் எண்ணம் போல
    ஆடியிலே காட்சி வைத்தால்
    பதறாது வந்து நிற்பேன்
    ஆலவயன் மனது வைத்தால்!

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!