மகாத்மா காந்தி கொலையைப் பற்றி கோட்சேவின் பார்வையில் சொல்லப்பட்ட ‘கோட்சே’ என்ற புத்தகத்தைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். [ஹிம்சாகர் என்பவர் எழுதியது.] அது கோட்சேவைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் காந்தியைக் கொல்லாத பட்சத்தில் கோட்சேவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் ஏது? அவன் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக். ஹிந்து வெறியன். அடிப்படைவாதி. அவனுடைய படிப்பு, அறிவு, அனுபவம், தேசபக்தி அனைத்தும் அவனைக்...
அநீ
நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன். நமது அதிர்ஷ்டம், அவர் இணையத்தில் எழுதுவது. துரதிருஷ்டம், அவரை ஒரு ஹிந்துத்துவவாதியாக மட்டுமே பார்த்து, என்ன எழுதினாலும் திட்டித் தீர்க்க ஒரு பெருங்குழு இருப்பது. பல சமயம் எனக்கு, இவர்களெல்லாம் படித்துவிட்டுத்தான் திட்டுகிறார்களா என்று சந்தேகமே வரும். ஏனெனில், போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக அரவிந்தன் எதுவும் எழுதுவதில்லை. தான்...
முதல் இரவு, முதல் குழந்தை மற்றும்…
விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும்...
கொடியில் ஏந்திய குழந்தை
இந்த வருடம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின்...
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்
ஜனவரி 4, 2011 அன்று தொடங்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியின் அரங்க வடிவமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. F 13,14,15 ஆகியவை கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடை எண்கள். கீழே வரைபடம் உள்ளது. வேறு சில முக்கியமான பதிப்பு நிறுவனங்களின் கடைகள் உள்ள இடங்களும் அதில் சுட்டப்பட்டிருக்கின்றன. வாசகர்களை சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.