யதியை எழுதத் தொடங்குகிறேன். 2009ல் என் அப்பாவின் புத்தகச் சேமிப்பை ஒரு நாள் அளைந்துகொண்டிருந்தபோது ஜாபால உபநிடதம் என்ற பழம்பிரதியொன்று கண்ணில் பட்டது. அது எத்தனை காலப் பழசு என்றுகூடத் தெரியவில்லை. முதல் சில பக்கங்கள் இல்லாமல், பழுப்பேறி, செல்லரித்து, தொட்டால் உதிரும் தருவாயில் இருந்தது அந்நூல். அப்பா வேதாந்த நாட்டம் கொண்டவரல்லர். அப்படியொரு பிரதியை அவர் தேடி அடைந்திருக்க முடியாது. யாரோ...