தேவன் பிறந்த நாள் விழா – அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தேவனின் ரசிகர்கள் – வாசகர்கள் சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். தேவன் அறக்கட்டளை சார்பில் சாருகேசி வரவேற்புரை நிகழ்த்தினார். அசோகமித்திரன் நூல்களை [கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி. சந்துரு, லக்ஷ்மி கடாட்சம்] வெளியிட்டுப்...
அன்புடன் அழைக்கிறேன், அனைவரும் வருக!
இன்று [08.09.2008] அமரர் தேவனின் 95வது பிறந்த நாள். நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில் கிழக்கு பதிப்பகம் இன்று தேவனின் ஐந்து நூல்களை செம்பதிப்பாக வெளியிடுகிறது. * மிஸ்டர் வேதாந்தம் * சி.ஐ.டி. சந்துரு * ஜஸ்டிஸ் ஜகந்நாதன் * கல்யாணி * லக்ஷ்மி கடாட்சம் [ஏற்கெனவே தேவனின் துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன், ஸ்ரீமான் சுதர்சனம், மாலதி ஆகியவை வெளிவந்துள்ளன.] இவற்றின் வெளியீட்டு விழா...
எனக்கு இங்கே வயது எட்டு
சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...
Google Chrome – A quick review
கூகுளிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அதன் எளிமை. அலங்காரங்களற்ற தன்மை. தவிரவும் வேகம். இன்றைய புதுவரவான கூகுள் க்ரோம் இணைய உலவியிலும் அதுவே பிரதானமாக இருக்கக் காண்கிறேன். நேற்றிரவே நான் தரவிறக்கம் செய்திருக்கவேண்டும். ‘குரோம்’பேட்டைவாசிகளுக்கு முன்னுரிமை தரலாம் என்று கூகுளாவது நினைத்திருக்கவேண்டும். பன்னிரண்டு மணிவரை காத்திருந்துவிட்டு போரடித்து, படுத்துவிட்டேன். இன்றைக்கு, இப்போதுதான்...
வரான் வரான் பூச்சாண்டி
varaan_varaan_boochandi சமீபத்தில் இந்தப் பாடல் அடிக்கடி என் காதில் விழுகிறது. அடிக்கடி முணுமுணுக்கிறேன். பேருந்தில் ஒருமுறை அருகிலிருந்தவரின் மொபைலில் ரிங் டோனாக ஒலித்து வியப்பூட்டியது. எந்தப் படத்தில் என்று பலரிடம் கேட்டுப்பார்த்தும் பதிலில்லை. யார் இசையமைத்தது என்று தெரியவில்லை. பாடியவர் குரலும் பரிச்சயமில்லாதிருக்கிறது. ஆனால் சுண்டியிழுக்கிறது. வீட்டில் என் குழந்தை விரும்பிக் கேட்கிறது. மற்ற...
யாளிமுட்டை
ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, ‘படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?’ என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி...
என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு...
வலி உணரும் நேரம்
எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.