நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது. சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக – எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது முடியாதிருந்தது. நேற்றைக்குத் திட்டமிட்டு...
கிழக்கு ப்ளஸ் – 10
இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை – இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என் பதில் இதுதான். பேசுவது என்...
கிழக்கு ப்ளஸ் – 9
அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி, எப்படி விற்கிறது, எதை எடுக்கிறார்கள்...
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008, எதிர்வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ம் தேதி வரை நெய்வேலி நகர புத்தகக் கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. கண்காட்சியில் கிழக்கு பதிப்பகமும் [அரங்கு எண் 115, 116] Prodigyயும் [அரங்கு எண் 123, 124] தனித்தனி ஸ்டால்கள் அமைக்கின்றன. New Horizon Mediaவின் பிற அனைத்து பதிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும். இக்கண்காட்சியை ஒட்டி நெய்வேலி...
பூங்குலலி
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனிப்பது அங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை. சுகமான ராகம், இசைக்குயில், மெல்லிசை மேகங்கள், இளராகங்கள் என்கிற பெயரில் எட்டுக்கு நாலு அளவில் பேனர் கட்டி ஒரு டிரம் செட், ஒரு யாமஹா கீபோர்ட், ஒரு செட் தபேலா, ஒரு ஜால்ரா, ஒரு கிடார் மற்றும் இரண்டு மைக்குகளுடன் எப்போதும் செக், செக் செக் என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் கனவுகள் என்னவாக...
கிழக்கு ப்ளஸ் – 8
புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும் முடியும். இதுதான் அடிப்படை. இது ஒன்றுதான்...
கிழக்கு ப்ளஸ் – 7
இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில் புத்தகம் அமையவேண்டுமென்பது. உண்மையில்...
மாமி மெஸ்
நாராயணனின் இந்தக் கட்டுரையின் கடைசி வரிக்கு நன்றி. கூகுள் சாட்டில் வழி சொன்ன விதத்தில் சற்று கோயிந்தசாமித்தனம் இருப்பினும், வேகாத மதிய வெயிலில் டிடிகே சாலையின் இப்புறமும் அப்புறமுமாக நடந்து களைத்தாலும் ஒருவழியாக அந்த மெஸ்ஸைக் கண்டுபிடித்துவிட்டேன். சிவசாய் மெஸ். டிடிகே சாலையில் நாரதகான சபாவுக்கு எதிரே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் நா.கா. சபாவுக்கு எதிர்சாரியில் ஒரு சிறு சந்தில் இருக்கிறது. சந்து...