ArchiveMay 2021

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 14)

சூனியனுக்கு, பாராவின் மீது கடுங்கோபம் பொங்கி வழிகிறது. தன்னுடைய கதையைப் பாரா திசைத்திருப்ப முயல்வதாக எண்ணுகிறான். முகத்தை மாற்றிய கோவிந்தசாமி வெண்பலகையில் சாகரிகாவிற்கு ஒரு கவிதை(?!) எழுதுகிறான். அடடே! என்ன ஒரு அருமையான கவிதை, இதை படித்திருந்தால் சாகரிகா உடனே கோவிந்தசாமியோடு சேர்ந்திருப்பாள். அடுத்து அவன் எழுதும் பதிவை ஒரு நூற்று இருபது பேர் பகிரவும் செய்கிறார்கள். சூனியனும், நிழலும் அதிர்ச்சி...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 13)

‘முகக்கொட்டகை’ – நீல நகரத்தில் அதிசயங்களுக்கு அளவில்லாமல் இருக்கிறது. கோவிந்தசாமியின் எண் வெண்பலகையில் ஏற்றுக்கொள்ள படாததால், ஒரு நீல நகரவாசியிடம் தன் பிரச்சனையைச் சொல்லி முகத்தை மாற்றிக் கொள்ளும் வழியொன்றை தெரிந்துக் கொள்கிறான். நீலநகரத்தில் வாழ்ந்து இறந்துபோன மனிதர்களின் முகங்கள் அங்கே கிடைக்கும். அது தான் முகக்கொட்டகை. சட்டையைக் கழற்றி மாற்றுவது போல எந்த முகத்தை...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 12)

இந்த அத்தியாயத்தில் ஷில்பா என்னும் புதிய கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது. சாகரிகாவின் தோழியான ஷில்பா நம் கோவிந்தசாமியை எதேர்ச்சியாக சந்திக்க நேர்கிறது. அவளின் உதவியோடு நீலநகரத்து குடியுரிமை வாங்குகிறான். இருந்தாலும், சூனியன் கோவிந்தசாமியின் நிழலைக் கொண்டு முன்பே அவன் பெயரில் நீலநகரத்தின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதால், வெண்பலகை கோவிந்தசாமியின் எண்ணை ஏற்க மறுக்கிறது. சூனியனைத் தேடி இன்னும் பல...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 11)

இந்த அத்தியாயத்தில் இரண்டு முக்கியமான விடயங்களைப் பார்க்கிறோம், ஒன்று சூனியன் தனக்கு கொடுக்கப்பட்டப் பணியில் எவ்வாறு தோற்றான் என்பதை தெரிந்து கொள்கிறோம். இரண்டு முகநூலில் நடக்கும், தினசரி நாம் கடந்து போகும் fake-id களையும் எவ்வாறு கதையில் பிணைத்து இருக்கிறார் என்பதையும் பார்க்கிறோம். இந்த அத்தியாயம் வெகு சுவாரசியமாய் அமைக்கப் பெற்றிருக்கிறது. அரசியின்(யாரென்று கணித்திருப்பீர்கள்) வருகை, அரசி...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 10)

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண இருபக்க வாதங்களையும் நியாயங்களையும் கேட்பது தானே சரியாக இருக்கும். அதனால், நம் சூனியன் சாகரிகாவின் மூளைக்குள்ளும் சென்று பார்ப்பதென முடிவு செய்கிறான். எனக்கும் சாகரிகாவின் மூளைக்குள் என்ன தான் இருக்கிறது என்பதை கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. சூனியனின் தண்டனைக்கான காரணத்தை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறோம். 20 இலட்சம் மக்களைக் கொல்ல வேண்டுமென்ற தனது டாஸ்க்கை முடித்தானா...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 15)

ஆக சூனியன் என்கின்ற உருவகம் மனித மூளையின் சிந்தனைப் பகுதியுடன் தொடர்புடையது. அப்படி அந்த சிந்தனையை தன் கட்டுக்குள் முழுவதுமாக கொண்டு வந்து விடக் கூடிய திறமை படைத்த சூனியன் ஏன் மனிதர்களின் மூளையில் இருக்கின்ற கடவுள் என்கின்ற பகுதியை மட்டும் ஒரேயடியாக அழித்து விடக்கூடாது? அதை செய்யாமல் இது என்ன தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை? ஆனால் ஒட்டு மொத்த நீல நகரத்தையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவர அவன்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 16)

சிந்திக்கத் தெரிந்த நிழல், தனித்தியங்கும் நிழல் என்ற கருத்தாக்கம் சிறப்பாக உள்ளது. இனி, கோவிந்தசாமியும் கோவிந்தசாமியின் நிழலும் தனித்தனியாக இயங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. நிஜத்திலிருந்து நிழல் பெற்ற சுதந்திரத்தை நிழல் ஒருபோதும் தவறவிடாது. இது நிழலின் சுதந்திரம். கோவிந்தசாமி தன்னுடைய நிழலிலிருந்தும் தனித்துவிடப்பட்டான். இனி அவனுக்கு அவன் நிழலும் சொந்தமில்லை. நிழல் இல்லாதவன் கோவிந்தசாமி...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 16)

கோவிந்தசாமி சாகரிகாவின் மீதுகொண்ட காதலால், இறைவனை வணங்கச் சென்றதன் நோக்கத்தை மறந்து சாகரிகாவைத் தன் கண்ணில் காட்டி விடுமாறு வேண்டுகிறான். சாகரிகாவின் மீது கொண்ட பற்றினால் இறைவனுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கிறான். சாகரிகாவைக் காண தன்னிலை மறந்து அவளைக் காண ஓடுகிறான். அந்தக் காட்சியை நிழலின் வழியே மிக அழகாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். அதன்பின் அவள் தன்னை அலங்கோலமாக இருக்கக் கூடிய காட்சியை அவள்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter