கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 11)

சூனியன் தண்டனை பெற்றதற்கான காரணம் ஓட்டமும் நடையுமாக கடந்து ஒரே அத்தியாயத்தில் முடிந்து விடுகிறது.
அரசியின் வருகையால் காரியம் துரிதமாக நடக்குமென எதிர்பார்த்தால் குறைந்த சேதாரத்துடன் சம்பவம் முடிந்து விட்டது.
சற்றே இப்பொழுது சிலவிஷயங்கள் புலப்படுகிறது..
தொடர்புப்பலகை என்பது கைபேசி அல்லது கணிணித்திரை என உருவகப்படுத்தத்தோன்றுகிறது. நீலநகரம் என்பது இணைய உலகம். முக்கியமாக நீல நிற எழுத்தை அடையாளமாக வைத்துள்ள முகநூல்.
சூனியன் கோவிந்தசாமியின் நிழலை கோவிந்தசாமி என்று அடையாளப்படுத்தி விட்டான். எனவே நிழல் என்பது Fake ID. முகநூல் உலகில் பெரும்பாலானோர் தன் சுய அடையாளத்தை மறைத்து வேறு அடையாளங்களில் உலவுகிறார்கள். எனவே நீலநகரம் விசித்திர உருவமைப்புடன் திரிகிறார்கள். இணைய உலகில் அந்தரங்கங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. எனவே அந்தரங்கங்கள் கைகளிலும் நெற்றியிலும் இடம்பெயர்ந்திருக்கின்றன கண்காட்சிப்பொருளாக!
பெண்களின் பதிவுகள் முகநூலில் பெரும் வரவேற்ப்பை பெறுகின்றன எத்தனைப்போலியானாலும்! ஆண்களின் பதிவுகள் உண்மையானாலும் கடந்து செல்லப்படுவதுண்டு.
எனக்கென்னவோ கோவிந்தசாமி மட்டுமே தானும் நிழலுமாய் நீலநகரத்தில் இரண்டாக உள்ளான். பிறர் அனைவருமே நிழலை மட்டுமே நீலநகரத்தில் உலவ விட்டாற்போல் தோன்றுகிறது.
மார்க் போன்ற இணைய தொடர்பு ஆப் உருவாக்கியவர்கள் சூனியர்களாய் இருக்கக்கூடும்.
மேலும் வாசிப்போம்.
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!