நீல நகரத்தின் வாயிலில் சிலுவையில் தொங்கியிருக்கும் சூனியனுக்கு ஏற்றாற்போல் அந்த இடத்திற்கு புதிதாக வரும் ஒரு எளிய மனிதனின் தலைக்குள் நுழைந்துக்கொள்ள நினைக்கிறான். அவன் பல நூற்றாண்டுக் காலத்தை கடந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் வந்திருப்பது இப்போது நாம் வசிக்கும் இந்த பூமிக்கு தான். (அதுவும் டோல்கேட் வாசலில் நின்றிருப்பான் போல) அந்த எளிய மனிதனின் பெயர் கோவிந்தசாமி மற்றும் அவனது இதுவரையிலான வாழ்க்கை விவரங்களை அவனது மண்டை ஓட்டுக்குள் நுழைந்து மூளையை ஆராய்ந்து கண்டறிகிறான்.
இந்த அத்தியாயம் முழுவதும் கோவிந்தசாமியின் வாழ்க்கை வரலாறு தான். அவன் பிறப்பு முதல் திருமணம் வரை visual ஆக ஓடிடி தளத்தில் சீரீஸ் பார்த்து கதை சொல்வது போல நம்மிடம் சொல்கிறான் இந்த சூனியன். கோவிந்தசாமி தீவிர ராம பக்தனாக ஆவதற்கு முன்பு வரை எங்கெங்கோ அலைந்து திரிந்து எப்படியோ கொஞ்சம் படித்து நாலு பெரிய மனிதர்களின் ஆசியோடு கொஞ்சம் பணம் சம்பாதித்து ராமனுக்கு கோவில் கட்டுவதற்காக இரண்டு செங்கல் எடுத்துக் கொண்டு ரயிலில் செல்லும்போதுதான் அவன் வாழ்க்கை துணை சாகரிகாவை சந்திக்கிறான். இருவரும் முரண்பட்டவர்கள்.மதத்திலும் சரி.கொள்கையிலும் சரி.ஆனால் காதல் வந்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.இனி என்ன காத்திருக்கிறது என்பது அடுத்த அத்தியாயத்தில்தானே தெரியும். எங்கேயோ ஆரம்பித்து இங்கு வந்து நிற்பான் சூனியன் என்பது சற்றும் எதிர்பாராத திருப்பம் தான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.