ஏதோ ஒரு பொது நிகழ்ச்சி. ஒரு ரசிகை யானியிடம் கேட்கிறார். நீங்கள் வாசிக்கும்போது உங்கள் அருகே நான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு பாடலையாவது அப்படி ரசிக்க வேண்டும். உங்களைத் தொடமாட்டேன். தொந்தரவு செய்ய மாட்டேன். வேண்டியதெல்லாம் அருகே அமர ஒரு வாய்ப்பு. யானி முதலில் திகைத்து விடுகிறார். பிறகு வெட்கப்படுகிறார். சிறிது சங்கடமாகிறார். அவர் அடுத்து வாசிக்கவிருக்கும் நாஸ்டால்ஜியா என்னும் பாடலின் ஸ்வரக்கட்டு...
இல்லாத நாட்டுக்குச் சென்று வருதல்
நீ போக விரும்பும் வெளிநாடு எது என்னும் வினாவை என் மகள் பலமுறை கேட்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் நான் சொல்லும் பதில், சோவியத் ரஷ்யா. அவளுக்கு சோவியத் தெரியாது. அது எப்படி இறந்தது என்று தெரியாது. இப்போதைய ரஷ்யாவின்மீது எனக்கு ஆர்வமில்லை என்பதையும் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் இக்கேள்வி திரும்பத் திரும்ப வரும். நான் என்றுமே செல்ல வாய்ப்பில்லாத அக்கற்பனை தேசத்தை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வேன்...
என் விஹாரத்தின் வரைபடம்
சிறு வயது முதல் கனவுகளைத் தின்றே உடல் பருத்துப் போனவன் நான். ஒப்பிட்டால், வயிற்றுக்குத் தின்றதெல்லாம் வெகு சொற்பம். இந்தக் கனவுகள்தாம் நெருக்கடிப் பொழுதுகளில் சோர்வடையாமல் செயலாற்ற வைக்கின்றன. தூக்கிச் சுமப்பது பெரும்பாடு என்றாலும் அந்தச் சுமை அத்தியாவசியமாகிப் போய்விட்டது. யாருக்கு இருக்காது? கனவற்ற ஒரு பிறவி அரிது. கனவுதான் ஒரு புத்தனை உருவாக்கியது. கனவுதான் ஒரு காந்தியைக் கொடுத்தது. கனவின்...
மொழி ஆளுமை – வ.உ.சியின் பாரதி நினைவுக் குறிப்புகள்
வ.உ. சிதம்பரம் பிள்ளையின் ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். பிள்ளை இதனை எந்த வருடம் எழுதினார் என்ற குறிப்பு இந்நூலில் இல்லை. அவர் 18.11.1936ல் மறைந்தார். எனவே 1935க்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் என்று வைத்துக்கொள்ளலாம். இன்றைக்கு எண்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூல், நேற்று எழுதப்பட்டது போன்ற தெளிவும் எளிமையும் கொண்டிருப்பது திரும்பத் திரும்ப...
பரம ரகசியங்களைக் குறித்த வெள்ளை அறிக்கை
நவீன வாழ்க்கை விடுக்கும் சவால்களில் மிக மோசமானதென்று நான் கருதுவது பாஸ்வர்டுகளை நினைவில் வைத்துக்கொள்வதுதான். பாஸ்வர்ட் மேனேஜர்கள், அனைத்துக்கும் ஒரே பாஸ்வர்ட், ஒரே பாஸ்வர்டின் பல்வேறு வித வெளிப்பாடுகள், இயந்திர உற்பத்தி பாஸ்வர்டுகள், ஒவ்வொரு முறையும் forgot password போட்டுப் புதிய பாஸ்வர்ட் பெறுதல் உள்ளிட்ட அனைத்து சாத்தியங்களிலும் முயற்சி செய்து சலித்துப் போன அனுபவத்தில் இதனை எழுதுகிறேன்...
உதிரி
உறவினர்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் ஒரு சென்னைவாசியைக்கூட நான் கண்டதில்லை. என்னையும் சேர்த்தேதான் சொல்லத் தோன்றுகிறது. என் நண்பர்களில் பலபேர் மதுரைக்காரர்கள். சிலர் திருநெல்வேலிக்காரர்கள். திருச்சிப் பக்கம் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தமது உறவினர்களைக் குறித்து எதிர்மறையாக என்னிடம் ஏதும் சொன்னதில்லை. மாறாக தாய்மாமன், அத்தை, சித்தப்பா, பங்காளி உறவு முறையில்...
குறுகத் தரித்தல்
எனக்கு எதுவும் எளிதாக இருக்கவேண்டும். கண்ணை உறுத்தக்கூடிய எதையும் என்னால் ஏற்க இயலவில்லை. நிறங்களானாலும் சரி. பொருள்களானாலும் சரி. வடிவமைப்பானாலும் சரி. நுணுக்கங்கள் வெளியே தெரியக்கூடாது என்பது என் எண்ணம். இதனை எழுதிக்கொண்டிருக்கும் மென்பொருளை உதாரணமாகக் காட்டுகிறேன். bold, italic, rich text, align left, align right, view options உள்ளிட்ட எந்த அலங்காரங்களும் என் கண்ணில் படக்கூடாது. அப்படி அவை...
ரஜினி: நடிகரும் தலைவரும்
என் நண்பர்களில் சிலர் தீவிரமான ரஜினி ரசிகர்கள். அவரைத் தலைவர் என்று குறிப்பிடுபவர்கள். பன்னெடுங்காலமாக அவர் அரசியலுக்கு வருவார், வருவார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு முறை ரஜினி கூட்டம் கூட்டி விரைவில் முடிவெடுப்பேன் என்று சொல்லும்போதும் என்னமோ திட்டமிருக்கு என்று சொல்வார்கள். கேலி கிண்டல்களை விலக்கி, இம்மனநிலையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். ரஜினி ஒரு நடிகர் என்பதைவிட, ஸ்டைல் மூலமாக...