என்னுடைய நிலமெல்லாம் ரத்தத்தில் பாலஸ்தீனியர் பகுதிகளில் யூதர்கள் எப்படிப் பரவி நிறைந்தார்கள் என்று விரிவாக எழுதியிருப்பேன். ஏழைகளுக்கு வங்கிகளால் தர இயலாத அளவுக்குக் கடன் கொடுத்து, அடைக்க வேண்டிய காலம் கடக்கும்போது கடனுக்கு ஈடாக நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு விடுவார்கள். இது ஒரு வழி. இரண்டாவது, ரைட் ராயலாகவே ஒரு பெரும் தொகையைச் சொல்லி, அதற்கு நிலங்களை விற்கச் சொல்லிக் கேட்பார்கள். பணம் கிடைத்தால்...
இறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]
கம்பன் ஒரு சரஸ்வதி சிலையினை வழிபட்டானாம், மகனின் சம்பவத்துக்கு பின் சோழநாடு வேண்டாமென சேர நாட்டுக்கு செல்லும்பொழுது அந்த சிலையினை கொண்டு சென்றானாம் இன்றும் அச்சிலை பத்மநாபபுரத்தில் உண்டாம், வருடத்திற்கொரு முறை யானையில் பவனி கொண்டு வருவார்களாம் எனக்கென்னமோ அச்சிலை பா.ராகவன் வீட்டில் இருக்கலாம் போல தோன்றுகின்றது, ஆம் “இறவான்” எனும் அவரின் நாவலை படித்தபின் அப்படித்தான் தோன்றுகின்றது...
இறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]
நிசப்தத்தின் இமை திறந்து கவனித்துக் கொண்டது இசையின் வெளியினுள் குடிகொண்ட பெருமெளனம் – பிரமிள் இசையின்றி இவ்வுலகில் உயிர்கள் ஏது? இயக்கம் ஏது? இசையே சுவாசமாக வாழும் ஒருவனின் தேடல் தான் “இறவான்”. முற்றிலும் புதியதொரு தளத்தில், ஒற்றை கதாபாத்திரமான எட்வின் ஜோசப் என்ற ஆபிரஹாம் ஹராரியின் சொல்முறையிலேயே நாவல் முழுவதும் அமைந்திருப்பது ஈர்ப்பு. முறையான பயிற்சி இல்லாமலேயே இசைக்கருவிகளை வாசிக்கத்...
கொசு – ஒரு மதிப்புரை [தர்ஷனா கார்த்திகேயன்]
அரசியலையும் திரைப்படங்களையும் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. கருப்பு வெள்ளை திரைப்படக் காலம் முதல் இணையத் தொடர் காலம் வரை, அறிவியல் தொழில்நுட்பங்கள் அறியாதவர்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் முதல், மெத்தப்படித்தவர்கள், பெருந்தனக்காரர்கள் வரை எல்லா காலத்திலும் எல்லா மக்களிடையேயும் இந்த இரண்டு துறைகளும் நீக்கமற ஊடுருவி இருக்கின்றன. இதில் திரைத்துறை...
ருசியியல் – ஒரு பார்வை [தர்ஷணா கார்த்திகேயன்]
வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு உடனேயே செய்யக்கூடாத விஷயம் என்றால் அது, அடுத்த வேளைக்கு சமைக்க ஆரம்பிப்பது. அதே போல பெரும் பசியுடன் இருக்கையில் செய்யக்கூடாத விஷயம் என்றால் அது பல் பொருள் அங்காடிக்கு செல்வது. ஆனால் நன்றாக உண்ட பின்பு சரி, முழுப் பட்டினியாக இருந்த பின்பும் சரி உணவு சார்ந்து செய்யக்கூடிய ஒரு நல்ல விஷயம் “ருசியியல்” நூலைப் படிப்பது தான். வெந்ததும் வேகாததுமாக பல ஆயிரம்...
இறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]
எல்லா எழுத்தாளர்களுக்கும் தன் பெயரை உலகம் சொல்லும்படிக்கு அதி உன்னதமான ஓர் படைப்பை எழுதிவிட ஆசை இருக்கும். பா.ராகவன் இதற்கென மெனக்கெடும் ஆளில்லை என்பதை பல விதங்களில் பலமுறை சொல்லியும், எழுதியுமிருக்கிறார். இறவான் – அவர் விரும்பியோ விரும்பாமலோ எழுதிவிட்ட கிளாசிக் நாவல். ஒரு முழு நீள நாவலில் நிச்சயம் தொய்வுறும் பகுதிகளென ஏதேனும் அமையும். ஆனால், இறவான் அந்த குறையையும் அநாயாசமாய்...
இறவான் – இசை சிரஞ்சீவி [ஸ்ரீனிவாச ராகவன்]
கலைஞர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். சிலர் காசுக்கு மாரடிப்பவர்கள். சிலர் புகழுக்கு மயங்குபவர்கள். பித்தனைப் போல் கலையே நான் என வாழ்பவர்கள் சொற்பம். பொதுவாகக் கலையைக் கடவுளாக நேசிக்கும் பலர் இயல்பிலிருந்து பிரிந்து வாழ்பவர்களாக இருப்தற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பெருங்கலைஞர்கள் பலர் வேறு உலகில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார். பிரபல டச்சு ஓவியக்கலைஞர் Vincent Vam Gogh இம்மாதிரி...
அபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]
ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது. சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது. ‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில்...