Blog

ஒரு நாள் கழிவது எப்படி?

யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. பார்க்கிறவர்களுள் பெரும்பான்மையானோர், ‘எப்படி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது?’ என்று தவறாமல் கேட்கிறார்கள் இப்போதெல்லாம். சென்ற ஆண்டு விருட்சத்தில் ஒரு பேட்டிக்காக அழகியசிங்கர் இதனைக் கேட்கப் போக, ஒவ்வொரு பேட்டியிலும் [கடைசியாக வந்த ஆதன் மீடியா பேட்டி வரை] இக்கேள்வி தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது. அப்படியா? ஜெயமோகன் எழுதுவதில் பத்தில் ஒரு பங்குகூட...

அலமாரி இதழ் பேட்டி

அலமாரி, ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள எனது பேட்டி: ஏன் திடீரென்று புனைவின் பக்கம் ஒதுங்கிவிட்டீர்கள்? எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை புனைவு மட்டுமே என் ஆர்வமாக இருக்கிறது. ராவ் குமுதத்தின் ஆசிரியராக இருந்தபோது முதல் முதலில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை எழுதச் சொல்லி என்னை அந்தப் பக்கம் இழுத்துவிட்டார். அந்தத் தொடரின் எதிர்பாராத பெரும் வெற்றி, அடுத்தப் பத்தாண்டுகளுக்கு என்னை அரசியல் வரலாறுகளையே...

மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை

இதுவரை வெளியாகியுள்ள என்னுடைய புத்தகங்களைப் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகளை மொத்தமாகத் தொகுத்திருக்கிறேன். இது யாருக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் சரித்திரத்துக்கு ரொம்ப முக்கியம். எழுத்தாளன் சுயமாக அச்சுப் புத்தகமும் மின்நூலும் வெளியிட்டுக்கொள்ளக் காலம் கட்டாயப்படுத்தும் சூழலில் அவனது கேட்லாக்கையும் அவனேதான் உருவாக்க வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. தமிழ்ச் சூழலென்பது சுற்றுச் சூழலினும்...

யதி வெளியீடு

புத்தகக் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று, யதி வெளியிடப்பட்டது. நண்பர் எஸ்.ரா. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பினாக்கிள் புக்ஸின் முதன்மை நிர்வாகி ஆர்விஎஸ்ஸிடம் இருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். எனக்காக வருகை தந்த எழுத்தாளர்கள் லஷ்மி சரவணகுமார், வாசு முருகவேல், காஞ்சி ரகுராம், நண்பர்கள் ஆர். பார்த்தசாரதி, ஹரன் பிரசன்னா, சேகர், கணேஷ் வெங்கடரமணன், பால கணேஷ், கவிஞர்...

இந்த வருடம் என்ன செய்தேன்?

* அச்சுப்புத்தக வாசிப்பு அநேகமாக இல்லாமல் போய்விட்டது. காசு கொடுத்து வாங்கியவற்றுள் பலவற்றை இன்னும் எடுக்கவேயில்லை. ஆனால் நிறைய புத்தகங்களை மின் நூல் வடிவில் படித்து முடித்தேன். இனி புத்தகக் காட்சியில் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இது மின்நூல் வடிவில் வரும் சாத்தியம் உண்டா என்று ஒரு கணம் யோசித்துவிட்டே வாங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். [மின் நூல்கள் வாங்குவதில் நிறையப் பணம் மிச்சம்...

பூனைக்கதை – ஒரு மதிப்புரை [ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி]

பூனை பேசுமா ? அதன் போக்கில் ஒரு நெடுங்கதையை அது சொல்லுமா ?  அதுவும் காலத்தைக் கடந்து அல்லது காலத்தை வென்று ஒரு பூனை இருக்குமா ? அப்படி இருந்தாலும் அது தான் தேர்ந்தெடுக்கும் மக்களோடு உரையாடுமா ?  ஏன் நடக்காது. பேசும் மிருகங்களை நாம் புராணங்களில் பார்க்கிறோம், நீதிக்கதைகள் முழுவதும் அவை வந்துகொண்டேதானே இருக்கிறது. ஆனால் ஒரு நவீன நாவலில் பேசுகின்ற மிருகத்தை இப்போது பல ஆண்டுகளாக நாம்...

பூனைக்கதை குறித்து ‘வாசகசாலை’ கார்த்திகேயன்

காலத்தைக் கடந்து வாழும் ஒரு மாயப் பூனையின் கண்கள் வழியே கலைஞர்களையும் படைப்புகளையும் அவர்களின் சூழலையும் பேசும் ஒரு உலகத்தை, வாசகர்களின் கண்முன்னே விரிவடையச் செய்கிறது இந்த “பூனைக்கதை” நாவல். வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த கலைஞர்களை, அவர்கள் விரும்பும் கலையின் பொருட்டு அவர்கள் வாழ நேர்ந்த சூழலை,பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவிலும் அவர்களை உயிர்ப்போடு...

பூனைக்கதைக்கு வாசகசாலை விருது

பூனைக்கதைக்கு வாசக சாலை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாசகசாலை அமைப்பாளர்களுக்கு நன்றி.
நாளை மாலை யதி அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த இரு விழாக்களிலும் இருப்பேன்.
பூனைக்கதை அறிமுகம் | கிண்டிலில் பூனைக்கதை
 

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!