இன்று [08.09.2008] அமரர் தேவனின் 95வது பிறந்த நாள். நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில் கிழக்கு பதிப்பகம் இன்று தேவனின் ஐந்து நூல்களை செம்பதிப்பாக வெளியிடுகிறது. * மிஸ்டர் வேதாந்தம் * சி.ஐ.டி. சந்துரு * ஜஸ்டிஸ் ஜகந்நாதன் * கல்யாணி * லக்ஷ்மி கடாட்சம் [ஏற்கெனவே தேவனின் துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன், ஸ்ரீமான் சுதர்சனம், மாலதி ஆகியவை வெளிவந்துள்ளன.] இவற்றின் வெளியீட்டு விழா...
நவீனத்துவத்தின் முகம்
நவீன இலக்கியம் என்றால் என்ன என்று நேற்று பின்னூட்டப் பெரியவர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அகராதி வைத்துப் படிக்க வேண்டியவையெல்லாம் பழைய இலக்கியம், அகராதி துணையின்றிப் படிக்க முடிகிறவை நவீன இலக்கியம் என்று சொல்லிவிடலாமா என்று அவரே தமது முடிவையும் இங்கே முன்வைத்திருந்தார். இம்மாதிரி விவகாரங்களில் பொதுவாக நான் கருத்து சொல்லுவதில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தீவிரவாதி மனநிலை கொண்ட வாசகன்...