கிரிக்கெட்

கோட்டை விடப்பட்ட கோப்பை

[கல்கியில் வெளியான அந்த கிரிக்கெட் கட்டுரை இதுதான். ஏதோ ஓர் உலகக்கோப்பை சமயம் எழுதியிருக்கிறேன். வருஷம் நினைவில்லை. போட்டியின் இறுதியில் கேப்டன் கங்குலி வீட்டில் ரசிகர்கள் கல்லெறிந்த காலம்.] இந்தவாட்டி வேர்ல்டு கப் இந்தியர்களைப் பொறுத்த அளவில் “ஹைலைட்ஸ் பார்க்கக் கூட லாயக்கில்லாத”  சங்கதியாகிவிட்டதை துரதிருஷ்டம் என்றெல்லாம் அநாவசியத்துக்கு வருணிப்பது தப்பு. ஒரே சொல் தான் –  கொழுப்பு. அணியில் எல்லாருமே மிக நன்றாகத் தொப்பை வளர்த்திருக்கிறார்கள்.  காட்ஸில்லா மாதிரி புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு ஓடுகிறார்கள். […]

கோட்டை விடப்பட்ட கோப்பை Read More »

நாலு ரன், ரெண்டு விக்கெட்

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை – வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் – வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். அலுப்பில் அப்போது உறங்கிவிட்டாலும் காலை எழுந்ததும்தான் வலி உயிர் போகிறது. ஒரு கேட்சுக்காக கிலோமீட்டர் கணக்கில் ஓடி, தபாலென்று பாய்ந்து

நாலு ரன், ரெண்டு விக்கெட் Read More »