சென்னை போன்ற பெரிய நகரங்களில் விலைவாசி உயர்வை உணவகங்களைக் கொண்டு கண்டறிய இயலாது. விலைவாசி அவ்வளவாக உயராத காலங்களிலும் சிறிய அளவிலாவது விலை வித்தியாசங்களைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். எனவே விலைவாசி உயர்வின்போது உணவுப் பொருள்களின் விலையேற்றம் அவ்வளவாக அதிர்ச்சி தராது என்பது இதன் பின்னணியில் உள்ள உளவியல். காய்கறிகளின் விலை – குறிப்பாக வெங்காய விலை உயரும்போது நாளிதழ்களில் அது செய்தியாக வரும்...
முகங்களின் பிறப்பிடம்
ஒரு புத்தகத்தை மக்கள் கையில் எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள் அதன் வடிவமைப்பாளர்கள். எழுதியவர் யார், வாங்க வேண்டுமா வேண்டாமா, நன்றாயிருக்கிறதா இல்லையா, தேவையா தண்டமா போன்றவையெல்லாம் பிறகு வருகிற விஷயங்கள். முதலில் கையில் எடுக்க வேண்டும். அல்லது, என்னை எடு, எடு என்று அது சுண்டி இழுக்க வேண்டும். புரட்டு, புரட்டு என்று ஆர்வத்தைத் தூண்டவேண்டும். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. சில புகழ் பெற்ற...
உருவி எடுத்த கதை
இசகுபிசகாக புத்தி கெட்டிருந்த ஒரு சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான நாவலுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டேன். 1909ம் ஆண்டு தொடங்கி 2000வது ஆண்டு வரை நீள்கிற மாதிரி கதை. அந்தக் கதையின் ஹீரோ, கதைப்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு வயதுகளில்தான் பிறப்பான். உதாரணமாக, அவனது முதல் பிறவியில், பிறக்கும்போதே அவனுக்குப் பதினெட்டு வயது. அடுத்தப் பிறவியைத் தனது ஐந்தாவது...
மறுபடியும் விளையாட்டு
அலகிலா விளையாட்டு, இலக்கியப்பீடம் இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் [2004] பரிசு வென்ற நாவல். அந்தப் பரிசை நிறுவியவர் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் அமரர் ஆர். சூடாமணி என்பதும், அப்போட்டிக்கு நான் எழுதியே ஆகவேண்டும் என்று என் நண்பர் நாகராஜகுமார் மிகவும் வற்புறுத்தியதுமே இதனை இவ்வடிவில் நான் எழுதக் காரணம். பரிசுக்குப் பிறகு இது இலக்கியப்பீடம் மாத இதழில் தொடராக வெளியாகி, இலக்கியப்பீடம்...
அமெரிக்க உளவாளி
தொழில் முறையில் எடிட்டராக இருப்பதால், புத்தகங்கள் விஷயத்தில் நான் இழக்கும் விஷயங்கள் சில உண்டு. அவற்றுள் முக்கியமானது, தனை மறந்து ரசிப்பது. ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த புத்தகங்களை பத்து முறை, இருபது முறையெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். இப்போது ஒரு புத்தகத்தை எடுத்தால் அதிகபட்சம் அரை மணி நேரம். எமகாதக சைஸ் புத்தகம் என்றால் அரைநாள். முடிந்தது. வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக...
பத்ரி நலமாக இருக்கிறார்!
இன்று காலை ஹிந்து நாளிதழின் நீத்தார் குறிப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்த பலபேர், அதிர்ச்சியடைந்து பத்ரிக்குத் தொலைபேசிய வண்ணம் உள்ளார்கள். ‘ஓ, நீங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீர்களா?’ என்று ஜோக்கடிப்போர் முதல், தமது அதிர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையில்லாமல் தவித்துத் திண்டாடுவோர் வரை அவர்களுள் பலவிதம். ஹிந்துவில் ‘காலமானார்’ என்று இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் பத்ரி சேஷாத்ரி வேறு யாரோ...
ஆஹா என்று சொல்லுங்கள்!
நாளை மறுநாள் 26.7.2009 தொடங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை 91.9 ஆஹா பண்பலை ரேடியோவில் [Aahaa FM-91.9] கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இது சினிமா நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு வாரமும் உருப்படியான ஒரு விஷயம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இதில் இடம்பெறும். கிழக்கு எழுத்தாளர்கள் பலர் பங்குபெறவிருக்கிறார்கள். முதல்...