பொறுக்கிகள்

அந்தப் பயலுக்குப் பதினாறு அல்லது பதினேழு வயது இருக்குமா? இந்த வயதில் காதலிக்காமல் வேறு எப்போது செய்யப் போகிறான் அதையெல்லாம்? பார்ப்பதற்கு நல்ல கருப்பாக, துறுதுறுவென்று இருந்தான். கண்ணில் அப்படியொரு துடிப்புமிக்க கள்ளத்தனம். சுற்றுமுற்றும் பார்த்தபடியே காம்பவுண்டு சுவருக்கு உட்புறம் இருந்த பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தான். உடன் படிக்கிற பெண்ணாக இருக்கலாம். என்னவாவது வகுப்புக்குப் போகிற வழியில் ஏற்பட்ட பழக்கமாக இருக்கலாம். எப்படியானாலும் அவளுக்கும் அவனோடு பேசுவது பிடித்துத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் தன் தாய் வந்து […]

பொறுக்கிகள் Read More »